Header image alt text

rauf hakeemஎல்லை நிர்ணய நடவடிக்கைகளில் சிறுபான்மையினருக்கு நியாயம் வழங்கப்படாமை தொடர்பில் தான் கடும் எதிர்ப்பு வெளியிடுவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். மேலும், புதிய தேர்தல் முறைக்கு தான் ஒருபோதும் இணங்கப் போவதில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

paffrelஇரட்டை பிரஜாவுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றுவதை போன்று இரட்டை பிரஜாவுரிமை பெற்று அரச சேவையில் நீடிக்கும் உத்தியோகத்தர்கள் தொடர்பிலும்

நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் கண்காணிப்புக்கான மக்கள் இயக்கம் (பெப்ரல்) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

ssபோதியளவு நீரினை பெற்றுக்கொள்ள முடியாமையால் யாழ்ப்பாணம் கப்பூது பகுதியைச் சேர்ந்த மக்கள் சொந்த இடத்தினை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வடமராட்சி கப்பூது பகுதியில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்ற போதிலும் பல வீடுகள் வெறுமையாகவே காட்சியளிக்கின்றன. Read more

accident (3)புத்தளம் சிராம்பியடி பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெறற வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் கீழ் இயங்கும் தொகைமதிப்பு புள்ளிவிவரத் திணைக்கள சாரதி முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா ராஜராஜன் என்பவரே உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் தொகைமதிப்பு புள்ளி விவரத் திணைக்களத்துக்குச் சொந்தமான கெப் ரக வாகனம், எதிர்த்திசையில் வந்த பாரவூர்தியுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.  Read more

Macronபிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த 39வயதுடைய இமானுவல் மக்ரான் வெற்றி பெற்றுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குபதிவில்  போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரோன் அவர்களும், தீவிர வலதுசாரி தேசியவாத தலைவர் மரின் லுக் பென் அவர்களும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். Read more

manoஇலங்கையின் இறுதிகட்ட போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறும் என்று அமைச்சர் மனோ கணேசன் பிபிசி தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.

ஐ நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசும் ஒரு பங்குதாரராக உள்ளதால், அந்தக் கடப்பாட்டிலிருந்து நழுவிவிட முடியாது என்றும் எனவே இது குறித்து தற்போதைய அரசாங்கம் உறுதியாகவுள்ளது என்றும் தேசிய சகவாழ்வு மற்றும் அரச மொழிகளுக்கான அமைச்சர் மனோ கணேசன் கூறுகிறார். Read more

chief ministers meeting33ஆவது முதலமைச்சர்கள் மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஹபரணையில் இன்று நடைபெற்றுள்ளது. அடுத்த முதலமைச்சர்கள் மாநாடு வட மேல் மாகாணத்தில் இடம்பெறவுள்ளதுடன், மாகாணத்தின் முதலமைச்சர் இன்று அதன் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 
sea borderஎல்லைத் தாண்டி மீன்பிடிப்பதைத் தடுக்கும் வகையில், இலங்கை அரசாங்கத்தினால் நடுக்கடலில் எல்லைப் பலகை வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால், அவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன. இதை தடுக்கும் நோக்கில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலும் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், நடுக்கடலில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்கும் வகையில் எல்லைப் பலகையை இலங்கை அரசாங்கம் வைத்துள்ளது எனத் தெரியவந்துள்ளது. இலங்கையில் இருந்து 5வது மணல்திட்டில் இலங்கை கொடியுடன் இந்தப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தனுஷ்கோடியில் இருந்து 5வது மணல்திட்டில் இந்திய அராங்கம் எல்லைப் பலகை வைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது
nepalநேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் 12ம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில், இலங்கை வரும் இவர், எதிர்வரும் 13ம் திகதி இடம்பெறவுள்ள சர்வதேச வெசாக் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.  2015 ஆம் ஆண்டு நேபாள ஜனாதிபதியானதன் பின்னர் பித்யா தேவி பண்டாரி மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும். இதேவேளை, சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று முதல் வெசாக் வாரத்தை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 13ம் திகதி வரை வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக, புத்தசாசன அமைச்சு குறிப்பிட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ranil-modiவெசாக் பண்டிகைக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு வருவது இலங்கையின் அழைப்பின் பேரிலேயே எனவும், இதன்போது எந்தவொரு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட மாட்டாது எனவும் இந்தியத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
 
அண்மையில் இந்தியாவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட விஜயத்திற்கு அமைய, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சில கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்தியா – இலங்கைக்கு இடையில் உண்மையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் என்ன? Read more