Header image alt text

satsoruupavathiஇலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரான செல்வி. சற்சொரூபவதி நாதன் தனது 81வது வயதில் நீர்கொழும்பில் காலமானார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செய்தி வாசிப்பாளராக, தயாரிப்பாளராக, நிகழ்ச்சி கட்டுப்பாட்டாளராக 40 வருடங்களுக்கும் அதிகமாக பணியாற்றிய இவர் பிபிசி தமிழோசையில் இலங்கை மடல் நிகழ்ச்சியிலும் பங்களிப்பு செய்து வந்திருந்தார். Read more

vadduவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக எமது புலம்பெயர் உறவான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த திருஞானசம்பந்தழூர்த்தி கிஸ்னதாஸ் என்பவரினால் புத்தூரை சேர்ந்த சிவபிரகாஸ் மாலினி என்பவருக்கு ஒரு புதிய துவிசக்கரவண்டியை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க தலைமை காரியாலத்தில் வைத்து அன்பளிப்பாக வழங்கியுள்ளார். மேற்படி சிவபிரகாஸ் மாலினி தனது விண்ணப்பத்திலும் நேரடியாகவும் எமக்கு தெரிவிக்கையில் தனது கணவன் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர் என்றும். தானும் தனது மகனும்(6 வயது) இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். Read more

viki 1

ஐக்கிய நாடுகள் அமைப்பு திறமையாக செயற்பட்டிருந்தால் வடக்கில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்திருக்க மாட்டார்கள் என்று ஐநா வின் அபிவிருத்தி செயற்பாட்டிற்கான அதிகாரியிடம் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இன்றைய தினம் முதலமைச்சரை சந்தித்த ஐநா வின் அபிவிருத்தி செயற்பாட்டிற்கான அதிகாரியிடம் இவ்வாறு தெரிவித்ததாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

Read more

north missing protestகிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு மக்களின் போராட்டம் தொடர்ந்தும் 43ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெறுகிறது. தங்களது காணிகளுக்கான உரித்தாவணங்களை வழங்குமாறும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் கோரி அவர்களின் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தங்களின் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Read more

pressபத்திரிகை சுதந்திரத்துக்கான சர்வதேச தினம் இன்று(03) உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் காவலனாய் அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புவதில் முன்னிற்கும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தடைகளையும் எதிர்கொள்கின்றனர்.

Read more

motor bombsகிளிநொச்சி உருத்திரபுரம் பூநகரி வீதியில் உள்ள நீவில் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. உருத்திரபுரம் நீவில் குளத்திற்கு அருகில் உள்ள பாரிய கிணற்றை இயந்திரத்தினால் மூடும் நடவடிக்கையில் பொது மக்கள் ஈடுப்பட்டிருந்த போதே சுமார் 17 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதேவேளை திருகோணமலை மூதூர் 7ம் வட்டாரம் தாஹா நகர் நீதிமன்ற வீதியில் உள்ள காணி ஒன்றின் தென்னந்தோப்பில் இருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்றுமாலை 3.30 மணியளில் மூதூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, எஸ்.எப் ஜி-87 ரக கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. கைக்குண்டு திருமலை விஷேட அதிரடைப்படையால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

kaluthrai01இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய கால நிலை காரணமாக ஆறு மாவட்டங்களில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களில் சிக்கி 91 பேர் பலியாகியிருப்பதாகவும், 110 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலே கூடுதலான மரணங்கள் பதிவாகியுள்ளதாக போலீஸ் மற்றும் பேரிடர் முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது Read more

unnamedலண்டன் நாட்டைச் சேர்ந்த விஜயரூபன் காசா அவர்களின் முதலாவது பிறந்த தினத்தை முன்னிட்டு விஜயரூபன் குடும்பத்தினரினால் பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள பிள்ளைகளுக்கு 20000 ரூபா பெறுமதியான் புத்தக பைகள் இன்று அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன.

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் காசா அவர்களுக்கு பாரதி இல்ல சிறுவர்கள் சார்பாகவும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்வதுடன், தமது பிள்ளையின் பிறந்த தினத்தை முன்னிட்டு இல்ல சிறார்களின் கல்வி தேவையை கருத்திற் கொண்டு புத்தகபைகள் அன்பளிப்பு செய்துள்ள விஜயரூபன் குடும்பத்தினருக்கும் நன்றிகளை கூறிக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

ssasகாணி  விடுவிப்பை வலியுறுத்தி முழங்காவில் இரணைமாதா நகர் பகுதியில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. தமது பூர்வீக இடத்திற்குச் செல்லவும் தங்கி நின்று தொழில் புரியவும் அனுமதிக்குமாறு கோரி இரணைத்தீவு மக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். Read more

sfdfdfவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக லண்டன் நாட்டைச் சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் அவர்களால் சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்பாள் ஆலயதின் வருடாந்த உற்சவ திருவிழாவை முன்னிட்டு சங்கரத்ததை துணைவி சந்தியை முகவரியாகக் கொண்டு வாழும் செல்லத்துரை சறோஜினிதேவி என்பவரது குடும்பத்தை தெரிவுசெய்து அவரது சிறு வியாபார நிலையத்தை ஊக்குவிக்கும் முகமாக ரூபா 18000 பெறுமதியான 1 மூடை பருப்பு, 1 மூடை சீனி, 1 மூடை அரிசி, 1 மூடை மா ஆகிய வியாபார பொருட்களை அன்பளிப்பு செய்துள்ளார். Read more