இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிவுதவியை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வழங்கியுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஆயுதங்கள் அகற்றுதல் மற்றும் குறைத்தல் அலுவலக பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த தினம் இலங்கைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த நிலையில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.