Header image alt text

உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத தானம் கொடுத்தல் நடவடிக்கைகள், நமது நாட்டிலேயே முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உணவு, உடைகள், பணம் ஆகியனவற்றைத் தானம் கொடுத்தவன், இளைஞனாக இருக்கும்போதே இரத்தத்தைத் தானம் கொடுத்தவன், அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், அந்த அதிகாரங்களையும் தானம் கொடுத்தவன் தானே என்றார். Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வட்டுக்கோட்டைத் தொகுதி அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு கடந்த ஞாயிறன்று(10-02-2019) கட்சியின் தொகுதி அமைப்பாளர் ந.கணேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

சித்தன்கேணியில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ த.சித்தார்த்தன் அவர்களும் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான திரு. பா.கஜதீபன் அவர்களும் கலந்துகொண்டு தொகுதியின் தேவைப்பாடுகள், அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினர். Read more

இலங்கை அரசாங்கம் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் முக்கியமான அடிகளை எடுத்து வைத்திருப்பதாக கனடா தெரிவித்துள்ளது. கனடாவின் ஆசிய பசுபிக் வலயத்துக்குப் பொறுப்பான பூகோளவிவகார அமைச்சர் கலாநிதி டொனால்ட் பொபயாஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் இலங்கையின் சுதந்திரத் தின நிகழ்வு இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார். இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு கனடா தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இனப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாதுள்ளமை, இலங்கையுடனான உறவினை விருத்தி செய்துக் கொள்வற்கு அடிப்படையான தடையாக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்து-பசுவிக் கட்டளைப் பிரதானி அட்மிரல் ஃபிலிப் டேவிட்சன், செனட் சபையின் ஆயுத சேவைகள் குழுவின் காங்கிரஸ் கூட்டத்தில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமான இராணுவத் தொடர்பு அதிகரித்து வருகிறது. எனினும் நாட்டின் அரசியல் குழப்பநிலை மற்றும் இனப்பிரச்சினை என்பன இந்த தொடர்புகளை மேலும் விருத்தி செய்ய தடையாக உள்ளது. Read more

வட மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் வகையில் கொக்கிளாய் பாலம் அமைக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு – திருகோணமலை, புல்மோட்டையை இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு 9 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இதற்கான 41. 5 மில்லியன் யூரோ கடனுதவியை செக் குடியரசின் ஏற்றுமதி வங்கி வழங்கவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 1 கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்படவுள்ள இந்த கொக்கிளாய் பாலத்தினூடாக முல்லைத்தீவிற்கும் திருகோணமலைக்கும் இடையிலான தூரத்தை 100 மீட்டர் வரை குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக மீள்குடியேற்ற அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் திறக்கவுள்ளது. அந்த நாட்டின் பிரதமர் ஸ்கொட் மொரிசன் இதனை அறிவித்துள்ளார்.

நவுரு மற்றும் மானஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏதிலிகள் சுகவீனமுறும்போது, அவர்கள் அவுஸ்தரேலியாவிற்கு சென்று மருத்துவ வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையிலான சட்ட மூலம் ஒன்று அந்த நாட்டின் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. எதிர் கட்சிகளான பசுமை கட்சியும், தொழிற்கட்சியும் இணைந்து இச் சட்டமூலத்தை வெற்றிப்பெறச் செய்தன. Read more

கல்வியியற் கல்லூரிகளுக்காக, மாணவர்கள் தபால் மூலமும் விண்ணப்பங்களை அனுப்புவதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களை, இணையத்தளம் ஊடாக விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, கல்வியியற் கல்லூரி ஆணையாளர் நாயகம் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார். Read more

இலங்கையில், ஜப்பான் நாட்டு உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் நீர் வழங்கல் திட்டங்கள் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவக் கருத்திட்டங்கள் தொடர்பாக, ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமை, உயர்கல்வி அமைச்சிலுள்ள அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

மேலும்,அடுத்த மாதம் கொழும்பில் நடத்தப்படவுள்ள நீர் வழங்கல், கழிவு நீர் முகாமைத்துவ கருத்திட்டங்களின் செயலமர்வில் ஜப்பானிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கொங்கிரீட் கொள்கலன்களின் பயன்பாடு தொடர்பான கருத்தரங்குக்கு அதிதியாகக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அத்துடன், உயர் கல்வித் துறையில் ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான தொடர்பு சம்பந்தமாகவும், இதன்போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் வாழ்கின்ற இந்தியவம்சாவளி மக்களை ஒன்றிணைக்க ‘அகதேசிய முற்போக்கு கழகம்’ எனும் அரசியல் கட்சி உருவாக்கப்படுள்ளது.

கடந்த சில வருடங்களாக வவுனியாவில் இருந்து இந்திய வம்சாவளி மக்களின் நலன்களுக்காக குரல் கொடுத்துவந்த ´வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியமானது´ அகதேசிய முற்போக்கு கழகம் எனும் பெயரில் அரசியல்கட்சியாக தற்போது பதியப்பட்டுள்ளது. இக்கட்சியின் தலைவராக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராயா நியமிக்கப்பட்டுள்ளார். ‘அகதேசிய முற்போக்கு கழகம்’ எனும் அரசியல் கட்சியின் உருவாக்கம் தொடர்பில் அதன் தலைவர் எம்.பி.நடராயா கூறுகையில், Read more

மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரே வெளிவரும் என சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

மன்னார் மனித புதைகுழியில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு அமெரிக்காவிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு மாதிரிகளின் ஆய்வு அறிக்கை தொடர்பாக இன்று (11) அவர் கருத்துக் கூறுகையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு 6 பொதிகள் செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு மறுநாள் 24 ஆம் திகதி விமானம் மூலம் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு 25 ஆம் திகதி புளோரிடாவில் உள்ள கூடத்திற்கு கார்பன் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டது. Read more