என்றும் தோழமையுடனான வணக்கங்களும், வாழ்த்துகளும்.
கழகத்திற்கு காட்டிய வழியிலும், கழகம் காட்டிய வழியிலும், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க புறப்பட்டு தம்முயிரைத் தியாகம் செய்தவர்களின் விபரங்களை ஆவணப்படுத்த வேண்டிய ஒரு நீண்ட செயற்திட்டத்தின் மிகச் சிறிய, பகுதியான முயற்சியே 2020 ற்கான நாட்காட்டி.
இம் முயற்சியில் குறைபாடுகள் நிச்சயமாக இருக்கும். அவற்றை விமர்சிப்பதை விடுத்து நிறைவு செய்வதற்கான வழிவகைகளை கண்டறிவதற்கான செயற்பாடுகளை ஊக்கப்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்.
சர்வதேசக் கிளை உறுப்பினர்கள் சிலரின் சிந்தனையில் உருவான முயற்சியெனினும், அனைத்து நாடுகளில் இருந்தும் தாயகத்தில் இருந்தும் நாட்காட்டி தயாரிப்பிற்காக இறுதிக் கட்டங்களில் கிடைத்த ஒத்துழைப்பு மெச்சத்தக்கது. Read more
இலங்கைக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான நல்லுறவு தொடர்ந்தும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து அலுவலகம் கோரியுள்ளது.
2020 ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை ஆரம்பமாகவுள்ளது.
குவைத்துக்கு வேலைவாய்ப்பிற்காக சென்று அந்நாட்டில் துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்து பின்னர் அந்நாட்டு தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்கள் 36 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
வவுனியா கல்குண்டாமடுவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 4பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
அடுப்பில் இருந்த சோற்றுப்பானை குழந்தை மீது வீழ்ந்ததில் 2 வயது பெண் குழந்தை இன்று உயிரிழந்துள்ளது.