மட்டக்களப்பில் திறக்கப்பட்டுள்ள காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தினை மூடுமாறு கோரியும் காணாமல்போனவர்கள் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தியும் நேற்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. முன்பாக கவன ஈர்ப்பு பேரணி ஆரம்பமாகி மட்டக்களப்பு நகர் ஊடாக சென்று மட்டக்களப்பு மத்திய வீதியில் திறக்கப்பட்டுள்ள காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read more
கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சுவிஸ் தூதரக அதிகாரி கானியா பெனிஸ்டர் உபயோகித்த தற்போது நீதிமன்றின் பொறுப்பில் இருக்கும் கைபேசியை அரச இரசாயன பரிசோதனைக்கு ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது.
மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் இன்றுகாலை ஒன்றுகூடிய மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், கையெழுத்துப்பெறும் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை, நெடுங்குளம் பகுதியில் பொதுமக்களின் காணிகளை அரச மயப்படுத்துவதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள பனந்தும்பு உற்பத்தி நிலைய பெயர்ப்பலகையில் தமிழுக்கு முதலிடம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட 13 நாடுகள், தங்களது நாட்டுக்கு அனுப்பிவைத்த பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய 150 கொள்கலன்களை, அந்த நாடுகளுக்கு மீள அனுப்பிவைக்க உள்ளதாக மலேசிய நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் யெவோ பீ யின் தெரிவித்துள்ளார்.
புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து, முதலாம் வருட, இரண்டாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்காக அரசியல் கட்சிகளினால் பிரேரிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான அனுமதி இன்று பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.