Header image alt text

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவன முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் பாலித பெர்ணான்டோ மற்றும் எவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க யாபா சேனாதிபதிக்கு எதிராக

இலஞ்ச ஆணைக்குழு வழக்கு தாக்கல்செய்த சந்தர்ப்பத்தில் குறித்த ஆணைக்குழுவின் ஆணையாளர்களினால் அதற்கு தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக என்பது தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்காக குறித்த வழக்கை இம்மாதம் 24ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. Read more

பஸ் மற்றும் அனைத்து கனரக வாகனங்கள் வீதியின் இடது நிரலில் மாத்திரம் செல்ல வேண்டும். கொழும்பு வாகன போக்குவரத்துப் பிரிவு கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இந்த நடைமுறையை முன்னெடுத்துள்ளது என்று நகர வாகன மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் கமல் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தை மீறிய 500 சாரதிகளுக்கு இக்காலப்பகுதிக்குள் இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். கொழும்பு நகரில் வாகன நெரிசலுக்கு கனரகவாகன சாரதிகள் இடதுபக்க நிரலைப் பயன்படுத்தாமையே இதற்கான காரணமாகும். Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மருமகன் மூவரும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில், மேற்படி தாய் உயிரிழந்துள்ளதுடன் மகளும் மருமகனும் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மராட்சி மிருசுவில் பகுதியில் நேற்றுமாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் தாயாரான நவரத்தினம் விமலேஸ்வரி (வயது-65) என்பவரே உயிரிழந்துள்ளார். Read more

இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நால்வரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.

இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. கட்டார், துருக்கி, லக்ஸம்பேர்க் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்கள் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் உயர்ஸ்தானிகர் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  Read more

இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோர், இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வெகுசன ஊடக அமைச்சராக, கெஹெலிய ரம்புக்வெல்ல இருந்த வேளையில், அவரது தனிப்பட்ட தொலைபேசி பட்டியலை, அரசாங்க அச்சு திணைக்களத்தின் நிதியில் செலுத்தியதாக குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. Read more

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தால் இன்று (20) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் அரச நியமனம் வழங்கக் கோரி வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

மாகாணத்தில் நீண்ட காலமாக கடமையாற்றி வருகின்ற நிலையிலும் நியமனம் வழங்கப்படாததைக் கண்டித்தும் நியமனங்களை வழங்க கோரியுமே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more

ஏ.எச்.எம்.டீ. நவாஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக

ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

சகல அமைச்சுகளுக்கும் தொழிற்சங்க மற்றும் பணியாளர் உறவுகளுக்காக உதவி செயலாளர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அனுமதி கிடைக்கபெற்றுள்ளதாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன. பணியாளர் சபை பிரதிநிதிகள் நிர்வாக நடவடிக்கைகளுக்காக இணைத்து கொள்ளல் Read more

புனித சிவனொளிபாத மலை யாத்திரையில் ஈடுபடும்போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் போத்தல்களை எடுத்து வருவதை தவிர்க்குமாறு மஸ்கெலிய பிரதேசசபை பக்தர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

சிவனொளிபாத மலைக்கான யாத்திரைக் காலம் ஆரம்பமான ஒரு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் வீசப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட போத்தல்கள் சேகரிக்கப்பட்டதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.  (அரசாங்க தகவல் திணைக்களம்)