Header image alt text

புதிதாக நியமனம் பெற்றிருக்கின்ற வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ், யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் இடையில் Read more

அம்பாறை நிந்தவூரில், இம்மாதம் முதலாம் திகதி, அரச ஊழியர் கடமையேற்பு வைபவத்தில் தாக்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் திருமதி தவப்பிரியா சுபராஜ் தொடர்பான விரிவான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

இத்தகவலை, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸதீன் லத்தீப் தெரிவித்தார். இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் இவ்விசாரணைக்கு, தாக்குதல் நடத்தியதாக முறையிடப்பட்டிருந்கும் நிந்தவூர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜ.எல்.எம்.கார்லிக் அழைக்கப்பட்டுள்ளார். Read more

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஒழுக்கக் கோவையை மீறியுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார். Read more

கட்டாய விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி இயக்கும் ஊழியர் துன்புறுத்தி மிரட்டப்பட்டமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ளதாக குற்ற புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது குறித்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றபோது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தனர். Read more

கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என்கிறார் சித்தார்த்தன்

(தி.சோபிதன்)

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதாக இருந்தால் பேச்சுவார்த்தைகளினூடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகளில் ஜனாதிபதி வெளிப்படுத்தி வருகின்ற கருத்துக்கள், அவருடைய நிலைப்பாடுகள், செயற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, Read more

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் உள்நாட்டு விவகார அமைச்சர் கே.சண்முகம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

நேற்று காலை இலங்கையை வந்தடைந்த அமைச்சர் கே.சண்முகம், அலரி மாளிகையில் வைத்து பிரதமரை சந்தித்து பேசியுள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் இதன்போது பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திகாந்தனின் (பிள்ளையான்) விளக்கமறியல் பெப்ரவரி 6ம் திகதிவரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005 டிசம்பர் 25ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளனர். Read more

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலர் பிரிவில் புலிபாய்ந்தகல் மீயான்குளம் பகுதியில் நேற்றிரவு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சந்திவெளி திகிளிவெட்டை பிரதேசத்தை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகம் ரவிச்சந்திரன் (வயது 43) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் புலிபாய்ந்தகல் மீயான்குளம் பிரதேசத்தில் தனக்குச் செந்தமான வயலில் இரவு காவலுக்காக நேற்று இரவு சென்ற வேலையே யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபில்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ஜனன தினம் அனுஷ்டிப்பிற்கு சுதந்திர கட்சியால் ஏற்பாடு செய்திருந்த போதிலும் அதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சந்திரிகா என்று கூறினாலே அனைவரும் அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டபில்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 121 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு இன்று காலை காலி முகத்திடலில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். Read more

திறைசேரியின் தேசிய பாதீட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஜூட் நிலுக்ஷான் நேற்று முற்பகல் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதாக

நிதி, பொருளாதார கொள்கை அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூட் நிலுக்ஷான் முன்னதாக தேசிய பாதீட்டு திணைக்களத்தின் உதவி பணிப்பாளராகவும், ஸ்ரீலங்கா சுங்க திணைக்களத்தின் பணிப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.