Header image alt text

போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய, நாடு முழுவதும் செயற்படும் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. Read more

கைது செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கங்கொடவில நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணையிலும் வெளிநாடு செல்ல தடை விதித்தும் ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ரஞ்சன் ராமநாயக்க வெளிநாடு செல்வதற்கு நீதவான் எச்.யு.கே. பெல்பொல தடை விதித்துள்ளார். Read more

இலங்கையின் புதிய வீதி வரைபடத்தை இம்மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அளவீட்டு பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பி.ரி. சங்கக்கார தெரிவித்துள்ளார்.

புதிய வீதி வரைபடத்தின் நிர்மாணப்பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். வங்கி மற்றும் அரச நிறுவனங்களை உள்ளடக்கிய பொது இடங்கள் தொடர்பான தகவல்கள் அந்த இடங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கங்களுடன் புதிய வீதி வரைபடம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். Read more

மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் இன்றுமுற்பகல் கூரை மேல் ஏறி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறிய 12க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

சிறைச்சாலையில் இருந்த கைதியொருவர் இன்று காலை மரணமானதைத் தொடர்ந்து குறித்த கைதியின் மரணம் தொடர்பில் நீதிபதி நேரடியாக வந்து விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தியே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. Read more

கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ஐ.எஸ்.எஸ் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை, கடந்த 19 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இதுவரை 305 பேரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஹேரத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள், காந்திப்பூங்காவில் நேற்று ஒன்றுகூடி விரைவாக தமக்கான நியமனத்தைத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்கள் இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் பாகுபாடின்றி விரைவாக நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். Read more

யாழ். அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றை நேற்றிரவு இனந்தெரியாத சிலர் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

வீட்டிலேயே மூவர் மாத்திரம் வசித்து வந்த நிலையில் நேற்றிரவு 9.30 மணி அளவில் திடீரென்று உட்புகுந்த கும்பல் வீட்டில் கண்ணாடிகள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை உடைத்து சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர். Read more

இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலைக்கு சொந்தமான பேருந்து மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் இன்று தாக்குதல் நடாத்தியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் வாகனேரி என்னும் இடத்தில் பயணிக்கும் போது இனந்தெரியாத நபர்கள் சிலர் சாரதியின் முன் பக்க கண்ணாடிக்கு கல்லெறிந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். Read more

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற தேடுதல் ஆணையின் படி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெல வீட்டுக்கு இன்று பிற்பகல் 3.00 மணியளவில் சென்ற மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் அங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். Read more

தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மன்னார் மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு இன்று காலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தல் தொடர்பாகவும் குறித்த தேர்தலோடு பணியாற்றிய அதிகாரிகளை சந்திக்கும் முகமாகவும் அவரின் மன்னார் விஜயம் அமைந்திருந்தது. Read more