Header image alt text

அரசாங்கத்தின் ஊடக பேச்சாளர்களாக ராஜாங்க அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் மஹிந்தாநந்த அளுத்கம ஆகியோர்

நியமிக்கப்பட்டுள்ளனர் என ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடைச் சிறைசாலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த செல்லபிள்ளை மகேந்திரன் எனப்படும் கைதியொருவரே நேற்று முன்தினம் வியாழக்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார். Read more

தனியார் அரை சொகுசு பேருந்து சேவை விவகாரம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு பேருந்து உரிமையாளர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் பேருந்துகளின் உரிமையாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்துகளில் மக்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை. Read more

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் சம்பத் அமரதுங்க இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்பத் அமரதுங்க ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஆகவும் பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

நாடாளுன்றில் எதிர்க்கட்சி முதற்கோலாசானாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி காஞ்சன ரத்வத்த நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

தொழில் ரீதியாக சட்டத்தரணியான அவர் கொழும்பு பல்கலைகழகத்தில் LL.B பட்டம் பெற்றுள்ளார். தகவல் தொழிநுட்பம், security printing மென்பொருள் அபிவிருத்தி, BPO, காப்புறுதி தரகு மற்றும் பாதுகாப்பு துறைகளில் தனியார் பிரிவில் பல்லேறு வியாபாரங்களில் பணிப்பாளர் குழு உறுப்பினராகவும் அனுபவமிக்கவராகவும் அவர் திகழ்கின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம், வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால், நேற்று கூடிய அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டபோது அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது. Read more

புதியபாதை ‘ஊடாக புதிய சிந்தனையை தந்த சிந்தனை சிற்பி தோழர் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்) 38வது நினைவுதினம் இன்றாகும்.

1982ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி சித்திரா பதிப்பகத்தில் வைத்து விடுதலைப் புலிகளினால் அரங்கேற்றப்பட்ட முதல் சகோதரப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட நாளும் இதுவாகும்.

தோழர் சுந்தரம் அவர்கள் தமிழீழ விடுதலையை மக்கள் விடுதலை மூலமே அடைய முடியும் என்ற கோட்பாட்டுடன் ‘புதியபாதை’ ஊடாக பொதுவுடமை கொள்கைளையும், புரட்சிகர சிந்தனையையும் ஊட்டிய சிறந்த சிந்தனை சிற்பி. Read more

வடமாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநர் திருமதி.பி.எம்.எஸ் சார்ல்ஸ் இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் வைத்து இன்று பிற்பகல் 1மணியளவில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

புதிய ஆளுநரை வரவேற்பதற்காக வவுனியா நகரசபை மண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை நிர்வாக சேவையின் சிறப்புத் தர அதிகாரியான திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், Read more

கிழக்கு மாகாணத்தின் புதிய உதவி பொலிஸ் மா அதிபராக நிலந்த ஜெயவர்தன தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண உதவி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் நேற்று இந்நிகழ்வு நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தின் உதவி பொலிஸ் மா அதிபராக இதுவரை கடமையிலிருந்த கபில ஜெயசேகரா, 2019 நவம்பர் மாதம் 20ஆம் திகதி ஒய்வுபெற்றுச் சென்றிருந்தார். Read more