Posted by plotenewseditor on 1 January 2020
Posted in செய்திகள்
என்றும் தோழமையுடனான வணக்கங்களும், வாழ்த்துகளும்.
கழகத்திற்கு காட்டிய வழியிலும், கழகம் காட்டிய வழியிலும், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க புறப்பட்டு தம்முயிரைத் தியாகம் செய்தவர்களின் விபரங்களை ஆவணப்படுத்த வேண்டிய ஒரு நீண்ட செயற்திட்டத்தின் மிகச் சிறிய, பகுதியான முயற்சியே 2020 ற்கான நாட்காட்டி.
இம் முயற்சியில் குறைபாடுகள் நிச்சயமாக இருக்கும். அவற்றை விமர்சிப்பதை விடுத்து நிறைவு செய்வதற்கான வழிவகைகளை கண்டறிவதற்கான செயற்பாடுகளை ஊக்கப்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்.
சர்வதேசக் கிளை உறுப்பினர்கள் சிலரின் சிந்தனையில் உருவான முயற்சியெனினும், அனைத்து நாடுகளில் இருந்தும் தாயகத்தில் இருந்தும் நாட்காட்டி தயாரிப்பிற்காக இறுதிக் கட்டங்களில் கிடைத்த ஒத்துழைப்பு மெச்சத்தக்கது. Read more