யாழ். அச்சுவேலி மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள் நேற்றையதினம் (05.02.2020) நடைபெற்றது. இதன்போது புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட
கிராம எழுச்சி விசேட நிதியினூடாக (ரூபா 1,000,000/-) நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு மைதான சுற்றுமதிலும் தர்மலிங்கம் சித்தார்த்தன்(பா.உ) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. Read more
புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக (ரூபா 2,000,000/-)
யாழ். போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இல்ல திறனாய்வு நிகழ்வு இடம்பெற்றபோது,
இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஹார்விட் ஷேபர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து டச்சஸ் ருட்லான்ட் அரச பிரதானி பிலிப் புருட், ஜேர்மனியை சேர்ந்த சில்ஷயா ரெப்ரிச், ரயினா மெலோர் ஆகியோரின் குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேச சபைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நாளை இந்தியா செல்லவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பிரதமர் குறித்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட அரச அதிபராக முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்கவை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது.
ஶ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் அவரது மனைவி ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர்கள் இன்று காலை சரணடைந்தனர்.
சீனாவில் கல்விகற்று அண்மையில் நாடு திரும்பிய வவுனியாவைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவி, கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் காயங்களுடன் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.