திருகோணமலை பாலம்போட்டாறு பகுதியில், லொறியின் உதவியாளரைத் தீ மூட்டி கொலைசெய்த குற்றச்சாட்டின்பேரில் தேடப்பட்டு வந்த சாரதியை, மன்னாரில் வைத்து நேற்றிரவு கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
கைது செய்யப்பட்டவர், திருகோணமலை-மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி யோகநாதன் (47 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். Read more
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனின் விளக்கமறியலை தொடர்ந்தும் நீடிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் கிளிநொச்சியினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சீனா வுஹான் நகரில் முதலில் பரவ ஆரபித்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 564 பேர் இறந்துள்ளதாகவும், 27,649 பேர் பாதிக்கபட்டுள்ளதாகவும், மேலும் 3,323 பேர் கவலைகிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய இராணுவ தளபதி சல்யுகோ ஒலேக் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
தபால் திணைக்களம் கடிதங்களை விநியோகிப்பதற்காக தபால் ஊழியர்களுக்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய மோட்டார் சைக்கிள்களை வழங்கவுள்ளது. இதற்காக அமைச்சரவை ஆவணம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணலை கொழும்பு வீதியின், தம்பலகாமம் பகுதியில் 99ஆம் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கொடிகாமம் நெல்லியடி வீதியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் 74 வயதுடைய துன்னாலையைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 21 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.