முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான  அஜஹான் கார்திய புஞ்சிஹேவா என்ற நபரை கைது செய்வதற்காக வௌியிடப்பட்டுள்ள பிடியாணையை அவ்வாறே செயற்பாடுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேருக்கு எதிரான குறித்த முறைப்பாடு நேற்று (17) அழைக்கப்பட்ட போது கோட்டை நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதவானால் வௌியிடப்பட்ட பிடியாணையை ரத்துச் செய்யுமாறு கோரி ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் சிலர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்த நிலையில் இதன்போது அவர்களுக்கு எதிரான பிடியாணையை செயற்படுத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டது.

எனினும், அர்ஜுன மகேந்திரன் மற்றும் அஜஹான் கார்திய புஞ்சிஹேவா ஆகிய சந்தேகநபர்கள் குறித்த பிடியாணைக்கு எதிராக மேன்முறையீட்டில் வழக்கு தாக்கல் செய்யாததனால் அவர்களை கைது செய்யுமாறு வௌியிடப்பட்ட பிடியாணையை அவ்வாறே செயற்படுத்த நடவடிக்கை எடுக்கமாறு இதன்போது நீதவானால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.