வடமராட்சி பிரதேசத்தின் திக்கம் மற்றும் கரணவாய் பகுதிகளில் இளைஞர்களுடனான தொடர் சந்திப்புக்கள்… Read more
Posted by plotenewseditor on 27 June 2020
Posted in செய்திகள்
வடமராட்சி பிரதேசத்தின் திக்கம் மற்றும் கரணவாய் பகுதிகளில் இளைஞர்களுடனான தொடர் சந்திப்புக்கள்… Read more
Posted by plotenewseditor on 27 June 2020
Posted in செய்திகள்
சங்கானை மற்றும் சுழிபுரம் மேற்குப் பகுதிகளில் இடம்பெற்ற மக்களுடனான கலந்துரையாடல்கள்… Read more
Posted by plotenewseditor on 26 June 2020
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2010 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 09 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில் கொரொனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1602 ஆக அதிகரித்துள்ளது.
Posted by plotenewseditor on 26 June 2020
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லெபனானில் சிக்கியிருந்த 171 இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர். ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர்கள் இன்று அதிகாலை இலங்கை வந்துள்ளனர். அனைவரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Posted by plotenewseditor on 26 June 2020
Posted in செய்திகள்
கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், புலிகள் அமைப்பில் இருந்த காலப்பகுதியில் அவரால் நடாத்தப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 26 June 2020
Posted in செய்திகள்
வடக்கு, கிழக்கில் 20,000 உளவாளிகள் நடமாடுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஒரு பூரணமான இராணுவ ஆட்சியொன்றை ஜனநாயகத்தின் மூலம் பெற்றதாகக் கூறி நாட்டில் நிறுவினாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என மாவை சேனாதிராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Posted by plotenewseditor on 25 June 2020
Posted in செய்திகள்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில், எதிர்வரும் 26.07.2020 ஞாயிற்றுக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு (14.00) சுவிஸ் சூரிச் மாநகரின் புக்கேக் பிளாட்ஸ் (GZ Buchegg, Bucheggstrasse -93, 8057 Zürich) எனும் மண்டபத்தில் “முப்பத்தோராவது வீரமக்கள் தினம்” அனுஷ்டிக்கப்பட உள்ளதென்பதை சுவிஸ் வாழ் தமிழ்மக்களுக்கு இத்தால் மூலம் அறிய தருகின்றோம்.
இந்நிகழ்வில் “மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதியும், கழகத்தின் செயலதிபருமான அமரர்.தோழர்.க.உமாமகேஸ்வரன் அவர்களையும், அவரது வழிகாட்டலில் தம்முயிரை ஈர்ந்த கழகக் கண்மணிகள், மற்றும் அனைத்து இயக்கப் போராளிகள் பொதுமக்கள் உட்பட, போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈர்ந்த, அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வுடன், மங்கள விளக்கேற்றல், மலரஞ்சலி மற்றும் கலை நிகழ்வுகள்” என்பன இடம்பெறவுள்ளன. Read more
Posted by plotenewseditor on 25 June 2020
Posted in செய்திகள்
சீசெல்ஸ் நாட்டில் சிக்கியிருந்த 254 பேர் இன்று இலங்கை வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சீசெல்ஸ் நாட்டிற்கு வேலைவாய்ப்பிற்காக சென்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
Posted by plotenewseditor on 25 June 2020
Posted in செய்திகள்
தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை 20 ஆசனங்களைப் பெறுமென, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இன்று திருமலையில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலை விடவும் வடக்கு, கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் இம்முறை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்களை பெறும் எனவும் தமிழ் பேசும் மக்கள் வாக்குகளைப் பிரிக்காமல் ஒரு குடையின் கீழ் தங்களது வாக்குகளை அளித்து சர்வதேசத்துக்கு ஒரு நல்ல செய்தியை காட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். Read more
Posted by plotenewseditor on 25 June 2020
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2001 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 7 பேர் அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், ஏனைய மூவரும் கடற்படை உறுப்பினர்கள் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.