இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 21 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரை 811 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 1562 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருணா அம்மான் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். அம்பாறை பகுதியில் வைத்து கடந்த 23ஆம் திகதி அவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
தென்மராட்சியின் வறணி பிரதேசத்தில் மக்கள் சந்திப்புக்கள்….
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு
துறைநீலாவணையைப் பிறப்பிடமாகவும், பெரியநீலாவணையை வசிப்பிடமாகவும் கொண்ட தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) முன்னாள் உறுப்பினர் திரு. சாமித்தம்பி வடிவேல் (தோழர் வினோத்) அவர்கள் 23-06-2020 செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
நவாலி கிராம மாதர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஊரெழு வளர்பிறை சனசமூக நிலையத்தில் 23.06.2020 தேர்தல் பிரச்சாரம்….
யாழ். வடமராட்சி பிரதேசத்தின் பல பகுதிகளிலும் இருந்து கந்தரோடையில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது இல்லத்திற்கு வருகைதந்த இளைஞர்களுடனான சந்திப்பு.
யாழ் மாவட்ட அழகக சங்கங்களின் சமாசத்தினரின் அழைப்பை ஏற்று சங்க நிர்வாகத்தினரை சந்தித்து கலந்துரையாடியபோது….
யாழ். ஈவினை பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் முயற்சியால் கிடைக்கப்பெற்ற வீதி அபிவிருத்திப்பணிகள் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது, நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.