யாழ் பல்கலைக் கழகத்திற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை புளொட் தலைவர் த.சித்தார்த்தன் (பா.உ), முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா கஜதீபன் பா.கஜதீபன் ஆகியோர் சந்தித்ததோடு, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் மக்களின் உணர்வுகளை பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து வெளிப்படுத்தி கலந்துரையாடினார்கள். Read more
கொரோனா வைரஸ் காரணமாக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர்த்து, ஏனைய பிரதேசங்களில் 2021ஆம் ஆண்டுக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்,
அம்பாறை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவல் நிலையையடுத்து, நகரப் பகுதியில் உள்ள சகல பாடசாலைகளும் நாளைய தினம் திறக்கப்படமாட்டாதென, அம்பாறை வலய கல்வி பணிமனை தெரிவித்துள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. 
கிழக்கு மாகாணத்தில் 6 பிரதேசங்கள், கொரோனா சிவப்பு வலயங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அ.லதாகரன் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றால் காத்தான்குடியில் மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளது.
வட்ஸ் அப் சமூக வலைத்தளத்தின் புதிய நிபந்தனைகளை தொடர்ந்து, டெலிகிராம், சிக்னல் ஆகிய மெஸேஜிங் செயலிகள் மீது மக்கள் கூடுதலாக ஆர்வம் காட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் தமிழ் மக்களின் நினைவிடங்கள் கௌரவப் படுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய முழு கதவடைப்புக்கு (ஹர்த்தால்) கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.