1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 47ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று (10.01.2021) ஆகும்.
நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்களாக நேற்று(10) அடையாளம் காணப்பட்ட 543 பேரில் 217 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
யாழ் பல்கலைக் கழகத்திற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை புளொட் தலைவர் த.சித்தார்த்தன் (பா.உ), முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா கஜதீபன் பா.கஜதீபன் ஆகியோர் சந்தித்ததோடு, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் மக்களின் உணர்வுகளை பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து வெளிப்படுத்தி கலந்துரையாடினார்கள்.
கொரோனா வைரஸ் காரணமாக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர்த்து, ஏனைய பிரதேசங்களில் 2021ஆம் ஆண்டுக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்,
அம்பாறை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவல் நிலையையடுத்து, நகரப் பகுதியில் உள்ள சகல பாடசாலைகளும் நாளைய தினம் திறக்கப்படமாட்டாதென, அம்பாறை வலய கல்வி பணிமனை தெரிவித்துள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. 
கிழக்கு மாகாணத்தில் 6 பிரதேசங்கள், கொரோனா சிவப்பு வலயங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அ.லதாகரன் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றால் காத்தான்குடியில் மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளது.