Header image alt text

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் பேரில், 146 சிறைக் கைதிகள் இன்று(04) விடுவிக்கப்படவுள்ளனர் என, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்தார்.

நில அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்கின்ற விடயம், மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்தும் கண்டித்தும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக் கட்சிகளின் ஆதரவுடன் நேற்றுக் காலை பொத்துவிலில் ஆரம்பமான பேரணி பாதுகாப்பு தரப்பின் தடைகளையும் தாண்டி முன்னேறி தாழங்குடாவில் தரித்து நின்றதுடன் இன்று காலை 8.30மணிக்கு மீண்டும் ஆரம்பித்து மட்டக்களப்பு நகரை அடைந்து திருகோணமலையை நோக்கி நகர்ந்து வருகிறது.

பிந்திய செய்திகள்படி மாலை 5.45 அளவில் திருகோணமலை குமரபுரத்தை அடைந்துள்ளது. இன்றைய பேரணி திருகோணமலை நகரில் நிறைவடைந்தது நாளை காலை மீண்டும் தொடரவுள்ளது.

இலங்கையில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் தொடர்பான வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. Read more

கொழும்பு பொரளை ரிஜ்வே வைத்தியசாலையில் 150 குழந்தைகள் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என, வைத்தியசாலை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார். Read more

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாள்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர். Read more

வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் சுதந்திரதினமான நாளை (04) முன்னெடுக்கப்படவிருந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கு, வவுனியா நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. Read more

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்சலெட்டின் அறிக்கையை நிராகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. Read more

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் தாரெக் அரிபுல் இஸ்லாம் மற்றும் துணை உயர் ஸ்தானிகர் மொஹமட் ஹஸ்ரத் அலி பான் ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று (02) விஜேராம இல்லத்தில் சந்தித்தனர். Read more