வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நாட்டில் நிலவும் உரத் தட்டுப்பாடு உள்ளிட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னிறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சபிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் சக்தி’ என்ற தலைப்பிலான ஆர்ப்பாட்டம், பல தடைகளையும் தாண்டி கொழும்பில் இன்று(16) நடத்தப்பட்டது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது அளவு ( பூஸ்டர்) நாளை(16) முதல் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான இதனை தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரச பாடசாலைகளில் இதுவரை ஆரம்பிக்கப்படாத அனைத்து தரங்களையும் அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பிக்க முடியும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்திருந்தார்.