Header image alt text

இலங்கை முதலீட்டுச் சபைக்கான புதிய தலைவராக ராஜா எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை தொடர்ந்தும் கட்டுப்படுத்துமாறு நிதி அமைச்சர் பெஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று (13) இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். Read more

13.12.2006இல் மரணித்த தோழர் சேகர் (சீனித்தம்பி பேரின்பநாயகம்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று

தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் சந்திப்பு நேற்று கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள குளக் டவர் விடுதியில் இரா.சம்பந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. Read more

தபால் ஊழியர்கள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். அதற்கமைய, இன்று (13) மாலை 04 மணி தொடக்கம் நாளை (14) நள்ளிரவு 12 மணி வரை அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கபூருக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டே ஜனாதிபதி, சிங்கபூருக்கு விஜயம் செய்துள்ளார்.

பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதுடன், பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு 2022 ஜனவரி 18 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.

இலங்கையில் 12 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு டோஸ் பைசர் தடுப்பூசியை போடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி நிபுணத்துவ குழுவால் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின்
இணைய “சூம்” வழி மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் இன்று (12.12.2021) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 1.30 மணிவரையில் நடைபெற்றது. Read more

நாட்டில் மேலும் 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 762 பேர் இன்றையதினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 572,188 ஆக அதிகரித்துள்ளது.