மறைந்த கழகத் தோழரின் மனைவியின் மருத்துவ செலவுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் லண்டன் கிளை செயற்பாட்டாளர்களான தோழர்கள் சிவபாலன், வேந்தன் ஆகியோர் இணைந்து மாதாமாதம் 10,000 ரூபாய் வழங்குவதாக தெரிவித்து கடந்த ஐப்பசி மாதம் முதல் வழங்கி வருகின்றனர். Read more
பல்கலைக்கழக மாணவியின் கல்வி நடவடிக்கைக்கு உதவியாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் லண்டன் கிளை செயற்பாட்டாளர் தோழர் சிவபாலன் அவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மாதாமாதம் 5000 ரூபாய் நிதியுதவி வழங்கி வருகின்றார்.
மன்னாரில் வறிய நிலையிலுள்ள பல்கலைக்கழக மாணவி ஒருவரின் கற்றல் செயற்பாட்டை மேம்படுத்துவதற்காக ஜெர்மனியில் இருந்து சமூக சேவையாளர்கள் இணைந்து தோழர் ஜெகநாதன் அவர்களின் ஊடாக அனுப்பி வைத்த ரூபாய் 100,000/= நிதியில் மடிக்கணனி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கையை அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வௌிநாடுகளிலுள்ள மூன்று இலங்கை தூதரகங்களை மூடுவதற்கு வௌிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. நைஜீரியாவிலுள்ள இலங்கை தூதரகத்தையும் ஜெர்மனியிலுள்ள பிரேங்பர்ட் மற்றும் சைப்பிரஸிலுள்ள இலங்கை கன்சியூலர் அலுவலகங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்வது உட்பட பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளை இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
ஒமிக்ரோன் தொற்றாளர்கள் கண்டறியப்படும் சூழலில் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்காமல் செயற்படும் போது நாடு பாரிய ஆபத்தான நிலையை நோக்கி செல்லக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய எரிவாயு நிறுவனங்களான லிட்ரோ மற்றும் லாப் இன் தலைவர்கள் இன்று (17) காலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தை பிறப்பிடமாகவும் தவசிகுளத்தை வாழ்விடமாகவும் கொண்டவரும், தோழர் பரமசிவம் அவர்களின் அன்புச் சகோதரனுமாகிய சுக்கிரன் சின்னசாமி (தவசிகுளம் பாலவினாயகர் ஆலயத் தலைவர்) அவர்கள் (15/12/2021) நேற்று காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களுடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறையை அமைப்பதற்கான உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.