ஒற்றுமை விடயத்தில் தமிழரசு கட்சி எதிர்மறையாக செயற்படுகிறது –
(ரொஷான் நாகலிங்கம்)
அண்மையில் இணைந்த தமிழ் கட்சிகளின் கூட்டு தேர்தல் நோக்கத்துக்காக உருவான ஒரு கூட்டணி அல்ல. ஆனால் அந்த ஒற்றுமையைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதை செய்வதற்காக அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும். ஒன்றாக இயங்குவது தமிழருக்கு ஒரு நல்ல விடயமாகத்தான் அமையும் என நான் நினைக்கின்றேன் என தெரிவித்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், கூடியளவிற்கு அனைவரையும் ஒற்றுமையாக அழைத்துச் செல்வதிலேயே கூடிய கவனம் செலுத்த வேண்டும். ஆனால் தமிழரசுக்கட்சி அதற்கு எதிர்மறையாக செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்றும் தெரிவித்தார். Read more
		    
நேற்று முன்தினம் (27), ஞாயிற்றுக்கிழமை, உக்ரேனின் வட-கிழக்கு நகரம் ஓக்டிர்காவில் ரஷ்யாவின் பீரங்கித் தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட உக்ரேன் படையினர் கொல்லப்பட்டதாக, உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில், உக்ரேன் இராணுவ பிரிவு ஒன்று அழிக்கப்பட்டதாகவும், உயிரிழந்தவகளின் சடலங்களை கண்டெடுக்கும் பணியில் மீட்புக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் சுமி நகர அரசு நிர்வாக தலைவர் டிமிட்ரோ லெவிட்ஸ்கி தெரிவித்தார். 
உக்ரைனிலுள்ள 02 மாணவர்கள் உட்பட அண்ணளவாக 40 இலங்கைப் பிரஜைகளை உக்ரைன் – போலந்து எல்லை வழியாக வெளியேற்றும் பணியில் இலங்கை வெளிவிவகார அமைச்சு தற்போது ஈடுபட்டுள்ளது என, அமைச்சு, இன்று (01) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
பயங்கரவாத தடுப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் இலங்கை உறுதியாக இருக்கிறது  என இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரின் உயர்மட்டப் பிரிவுக் கூட்டத்தில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜி.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
ஹொரவ்பொத்தானை – திருகோணமலை வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் வணபிதாவும் சாரதியும் பலியாகினர். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. ஹொரவ்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனமும் திருகோணமலை நோக்கி வந்த சொகுசு காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.