இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, சர்வதேச விமான சேவைகள் இன்று (27) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 55 வருடங்களுக்கு பின்னர் சர்வதேச சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாலைத்தீவிலிருந்து வருகைத் தந்த விமானமொன்று இன்று (27) காலை 08:47க்கு தரையிறங்கியது. தீயணைப்பு வாகனங்கள் இரண்டு, தண்ணீரை பீச்சியடித்து முதலாவது விமானத்தை வரவேற்றன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு புதியத் தலைவரை தெரிவு செய்வதற்காக, காங்கிரஸின் தேசிய சபை, எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ளது. காங்கிரஸின் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பின்னர், காங்கிரஸின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டார்.
பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (பிம்ஸ்டெக்) மாநாட்டை இலங்கை அரசாங்கம் 2022 மார்ச் 28-30 வரை கொழும்பில் கலப்பின முறைமையில் நடாத்தவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தமிழகத்துக்கு அகதிகளாக வருபவா்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதற்காக மண்டபம் முகாமில் உள்ள 147 குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம்- குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி 17ஆம் திகதி தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தர உள்ளார் எதிர்வரும் 28ம் திகதி வரும் அவர் , 30ஆம் திகதி வரை தங்கியிருப்பார் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழ் அரசு கட்சி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) ஆகிய கட்சிகளிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்குமிடையில் இன்று காலை கலந்துரையாடல் நடைபெற்றது. ரெலோ இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
கழகத்தின் மத்திய குழு உறுப்பினர் தோழர் அசோக் அவர்களின் அன்புத் தாயார் திருமதி சிங்கராஜா அம்புரோஷியா அவர்களின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது திருகோணமலை, லிங்கநகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தபோது வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து கழக முக்கியஸ்தர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், தோழர்கள் கலந்து கொண்டு அன்னைக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், எரிபொருட்கள் உள்ளிட்ட சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, அரசாங்கத்தின் இயலாமை ஆகியவற்றை கண்டித்து, ஐக்கிய தேசியக் கட்சியினரால், கொழும்பு ஹைட்பார்க்கில், சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.