ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மெய்நிகர் வழி மத்தியகுழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 02.00 மணிமுதல் 04.30 மணிவரை கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. Read more
ஜனாதிபதி மாளிகையினுள் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட 17,850,000 ரூபாய் பணம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. குறித்த பணத் தொகை தொடர்பில் நாளை தினம் நீதிமன்றத்திற்கு தௌிவு படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
காங்கேசன்துறை – முறிகண்டி இடையேயான யாழ் ராணி தொடருந்து சேவை நாளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது என யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய சூழ்நிலைக்கு தீர்வு கிடைக்கும் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியம், பிணை எடுப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் நிலைமைக்கு தீர்வு காண்பதற்கான வழியை தயாரித்து இலங்கையை வழமைக்கு கொண்டு வர வேண்டியது அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் பொறுப்பாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மக்களுடன் இந்தியா நிற்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அரிந்தம் பக்ஷி தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள நிலைமை தொடர்பான ஊடகக் கேள்விகளுக்கான பதிலளிப்பாகவே குறித்த கருத்தை பக்ஷி வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கை மக்களை திருப்திப்படுத்தும் நீண்ட கால பொருளாதார மற்றும் அரசியல் தீர்வுகளை அடைவதற்கு விரைவாக செயற்படுமாறு இலங்கையின் அரசியல் கட்சிகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.