தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமாகிய அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 33ஆவது நினைவு தினம் இன்று (13.07.2022)
வலிகாமம்-மேற்கு பிரதேசசபை வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவுருவச் சிலையின் முன்பாக இடம்பெற்றது. Read more
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 33வது வீரமக்கள் தினம் இன்று ஆரம்பமானது. வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் இன்று 13/07/2022 காலை 10.00 மணியளவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான தோழர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் தலைமையில் அஞ்சலி நிகழ்வு ஆரம்பமானது.
கட்சியினுடைய கொழும்பு காரியாலத்தில் 33ஆவது வீரமக்கள் தின ஆரம்ப நிகழ்வு இன்றுகாலை இடம்பெற்றது.
13.07.1989ல் மரணித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாளும் வீரமக்கள் தின ஆரம்ப நாளும் இன்று….
இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் தசாப்தங்களாக இருந்த ராஜபக்ஷர்களின் ஆட்சி முடிவுக்கு வரும் எனவும் பிபிசி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கும் வகையில் அதி விசேட வர்த்மானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
சர்வக்கட்சி அரசாங்கத்தின் கீழ் புதிய பிரதமராக அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிக்கு இணக்கமான ஒருவரை நியமிக்குமாறு சபாநாயகரிடம் பதில் ஜனாதிபதியான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவரை பிரதமர் பதவிக்கு பெயரிடுமாறு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிற்கு அவர் இதனை அறிவித்துள்ளார். பிரதமர் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது பாரியாரும் இலங்கையை விட்டு இன்று (13) அதிகாலை வெளியேறியுள்ளனர் என்று பிரதமர் அலுவலகம் மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை உறுதிப்படுத்தின.
பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் போராட்டம் நடத்திய மக்கள் பிரதமரின் அலுவலகத்திற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.