இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரெளபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி, திரெளபதி முர்மு, இந்தியாவின் முதல் பழங்குடியின மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். தவிர, ஒடிசாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார். Read more
புதிய பிரதமராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நாளை ( 22) காலை பதவியேற்றுக் கொள்ளவுள்ளார்
சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வௌிநாட்டிற்கு செல்ல முயன்ற 33 பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பை அண்மித்த கடற்பிராந்தியத்தில் இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. 19 ஆண்களும் 09 பெண்களும் 05 சிறார்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பாராளுமன்றத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வரவேற்றார்.