வவுனியா சிதம்பரபுரம் இளந்தளிர் முன்பள்ளிக் கட்டிட திறப்பு விழாவும், விளையட்டு விழாவும் நேற்று(23.07.2022) சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக எமது கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி லிங்கநாதன் அவர்கள் கலந்துகொண்டு முன்பள்ளிக்கான கட்டிடத்தை வைபவ ரீதியாக திறந்துவைத்தார்.

இக்கட்டிடமானது வடக்கு மாகாண சபையின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து 2018ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டு கொரோனா மற்றும் நாட்டு நிலைமைகளின் காரணமாக திறக்கப்படாதிருந்த நிலையில் நேற்றையதினம் திறந்துவைக்கப்பட்டது.

நிகழ்வில் சிதம்பரபுரம் பழனிமுருகன் ஆலய தலைவர் மாதவன், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சௌந்தர், சமூக ஆர்வலர் சிவகாந்தன், முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.