அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (27) முற்பகல் சந்தித்தார். ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர், அவருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவும் உறவுகளை வலுவான அணுகுமுறையின் மூலம் முன்னெடுத்துச் செல்வது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேலும், புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தூதுவர் உறுதியளித்தார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.