திருகோணமலை மூதூரை பிறப்பிடமாகவும் வவுனியா கூமாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட தோழர் காண்டீபன் (கணபதி கேசவப்பிள்ளை) அவர்கள் நேற்று (09.08.2022) சுகயீனம் காரணமாக மரணமெய்தினார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் ஆழ்ந்த துயருடன் பகிர்ந்து கொள்கிறோம். Read more
பள்ளக்கமத்தை பிறப்பிடமாகவும் முருங்கன்கமத்தை வதிவிடமாகவும் கொண்ட தோழர் மரியான் (தீயோகு மரியதாஸ்) அவர்கள் நேற்று (09.08.2022) புதன்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் தற்காலிகமாக தங்குவதற்காக கோரிக்கை விடுத்துள்ளதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகாலச் சட்டங்களை அமுல்படுத்துவதன் ஊடாக பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகக் கோரி தாக்கல் செய்த மூன்று அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் 12 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை இன்று (10) இரண்டாவது நாளாக பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேர்தல் மற்றும் தேர்தல்களின் கட்டமைப்பில் திருத்தங்களை முன்மொழிய பாராளுமன்ற சிறப்புக் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை அமுல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுவான உடன்பாட்டுக்கு வந்துள்ளன.