பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, அவரை அமைச்சர் பதவியில் இருந்து அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியிருந்தார். Read more
எமது கட்சியினுடைய முன்னாள் நகரசபை உறுப்பினர் அமரர் தோழர் கோ.நடேசபிள்ளை அவர்களின் துணைவியார் ருக்குமணி அவர்கள் நேற்றிரவு காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
நாடளாவிய ரீதியில் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகம் நேற்று (31) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, இன்று (01) முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் QR முறை மற்றும் கோட்டாவின் கீழ் மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும்.
நாட்டில் இன்றைய தினம் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 665,847 ஆக அதிகரித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். மொட்டுக் கட்சிக்குள் இருந்துகொண்டு சுயாதீனமாக இயங்கி வரும் சதிகாரர்களை கட்சியிலிருந்து நீக்குவோம் எனவும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் இன்று (01) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒன்லைன் முறையின் ஊடாக கோரப்படவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை, ஓகஸ்ட் 4 ஆம் திகதிவரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதியின்றி, நாட்டைவிட்டு வெளியேற முடியாது என்றும் உயர்நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும், இது அரசியல் பதட்டங்களை தூண்டும் எனவும் வோல் ஸ்ட்ரீட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.