கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் போராட்டத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நேற்று இரவு தாம், போராட்டம் குறித்து அறிவித்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்த போதும் தமக்கு அறிவிக்கப்படவில்லை என பொலிஸார் மறுத்துள்ள நிலையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. Read more
காலிமுகத்திடலில் நேற்று இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தை பொலிஸார் கலைத்த விதம் தொடர்பில் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டமைக்கான காரணங்களை விவரித்து 24 மணி நேரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான (பிரதேச சபைகள், மாநகர சபைகள், நகர சபைகள்) சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 இலிருந்து 4000 ஆகக் குறைத்து, ஜனசபா திட்டத்தையும் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நான்கு மாதங்களின் பின்னர் ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான விமான சேவை இன்று(10) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ரஷ்யாவின் எரோப்ளோட்(Aeroflot) விமானம் இன்று(10) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
மன்னார் அரிப்பு கிராமத்தைச் சேர்ந்தவரும் கழகத் தோழர் சோதி (அ.பெனடிற் குரூஸ்) அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி அ.வெரோணிக்கா லெம்பேட் அவர்கள் நேற்று (08.10.2022) சனிக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் ஜேர்மன் ஸ்டுட்கார்ட் நகர தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நேற்று (06.10.2022) வியாழக்கிழமை ஜேர்மன் ஸ்டுட்கார்ட் நகரில் ஆரம்பமான தமிழ் மொழி, பண்பாடு மற்றும் வரலாறு பன்னாட்டு பரவல் தொடர்பான சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது.
திருநாவற்குளம் 1ம் ஒழுங்கையில் அமையப்பெற்றுள்ள புதிய கட்டிட திறப்பு விழா சங்க தலைவர் இராஜேஸ்வரன் ரஞ்சன் தலைமையில்
பிரதான மற்றும் கரையோர மார்க்கங்கள் ஊடாக கொழும்பிற்கு பயணிக்கும் ரயில்கள் தாமதமாகியுள்ளன. சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக ரயில்கள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் என கொழும்பு மாநகர மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு…