வவுனியா சேமமடுப்  பகுதியில் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இருபத்தொன்பது பொதுமக்களின் முப்பத்தி எட்டாவது நினைவு நாள் நேற்றையதினம் சேமமடு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு அனுஷ்ட்டிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தில் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றதுடன், 1000 மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன் மரணித்தோரின் ஞாபகார்த்தமாக வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தின் மணிக்கூட்டு கோபுரத்தை அமைப்பதுக்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்),  உயிரிழந்தோரின் குடும்பத்தினர், பாடசாலை மாணவர்களுடன் பாடசாலை சமூகத்தினர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.