நன்றி, உப சபாநாயகர் அவர்களே!
இன்று நாங்கள் மிக முக்கியமான மூன்று அமைச்சுக்களின் தலைப்பின் கீழே இந்த விவாதத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றோம்.
இதிலே நிதியமைச்சு, பொருளாதார உறுதிப்பாடு, தேசிய கொள்கைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாட்:டு அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களும் ஜனாதிபதியின் கீழ் வருகின்றன. இவை மிக முக்கியமான அமைச்சுக்கள். ஜனாதிபதி அவர்கள் இந்த நாடு பொருளாதாரத்திலே மிகவும் பின்னடைவாக இருந்த ஒரு இக்கட்டான காலகட்டத்திலே இந்த சபையால் நிரந்தரமாக மீதிக் காலத்திற்காக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார். Read more