நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல: 89, விசுவமடு மேற்கை தற்காலிக முகவரியாகவும் கொண்ட தனுக்கோடி தம்பிஐயா அவர்கள் (08.12.2022) இன்றைய தினம் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

இவர் எமது கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் தம்பிஐயா கேதினி அவர்களின் அன்புத் தந்தையார் ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
08.12.2022.
குறிப்பு: அவரது பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக் கிரியைகள் நாளை காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது.