முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் பகுதியைச் சேர்ந்த நட்சத்திரா வானம் ஆகிய இரு மகளிர் அமைப்புக்களுக்கு சுழற்சிமுறை கடனுதவியாக ரூபாய் 50,000/= நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது. ஜேர்மனியில் வசிக்கும் சிவகுமாரன் கோபிகா அவர்களின் (19.12.2022) பிறந்தநாளை முன்னிட்டு அவரது இசை ஆசிரியை திருமதி Schroder தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து கழகத்தின் ஜேர்மன் கிளையின் ஊடாக வழங்கி வைத்த நிதியில் இந்த கடனுதவி வழங்கப்பட்டது.

நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் பொருளாளர் க.சிவநேசன்(பவன்), கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் இரா.தயாபரன், கட்சியின் இளைஞர் அணிப் பொறுப்பாளர் யூட்சன், சமூக செயற்பாட்டாளர் உதயன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.