இலங்கைப் பிரஜைகளுக்கான இலத்திரனியல் விசாக்களை ( eVisa ) இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது. வசதியான பயணம், ஓய்வு, வணிகம், மாநாடுகள் போன்றவற்றிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று (09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 79 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் கிடைத்தன. அதன்படி, உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
சீனப் பிரதமர் Li Keqiang நேற்று (08) சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவைச் சந்தித்து Macro கொள்கை ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பு சீனாவில் இடம்பெற்றுள்ளது.
டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நேற்றைய தினம் பதிவான காற்று மாசுபாட்டுடன் ஒப்பிடுகையில் காற்று மாசுபாட்டின் அளவு தற்போது கணிசமாக குறைந்துள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடும்குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பலகிராமங்களில் 165 க்கு மேற்பட்ட மாடுகள் மற்றும் 3 ஆடுகள் என்பன இறந்துள்ளன. இந்த இறப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு தனி ஆங்கில மொழியில் தோற்ற வேண்டும் என்ற வர்த்தமானியை இரத்துச்செய்யும் வகையில், அடுத்த வாரம் சபையில் யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (08) உரையாற்றிய போது மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளை வௌ்ளிக்கிழமை (09) பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வளிமண்டல சூழலை கருத்தில் கொண்டு நாளை (09) பாடசாலை நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு முடிவெடுக்க வேண்டுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கல்வி அமைச்சருக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர், சரா.புவனேஸ்வரன் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(08-12-2020 – 08.12.2022)
நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல: 89, விசுவமடு மேற்கை தற்காலிக முகவரியாகவும் கொண்ட தனுக்கோடி தம்பிஐயா அவர்கள் (08.12.2022) இன்றைய தினம் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.