பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்குள்இ பலவந்தமாக நுழைய முயற்சித்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோமாகம பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தைஇ திறக்குமாறு வலியுறுத்தி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இன்று பிற்பகல் கல்வி அமைச்சுக்கு சென்றனர். Read more
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(23) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு, சட்ட ரீதியாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் அவ்வாறு தேர்தலை நடத்துவதற்கு போதுமான நிதி இல்லை எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணத்தில் உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ரோஹினி மாரசிங்க தலைமையிலான குழு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களை கேந்திரமாக கொண்டு கடந்த 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் விஜயம் மேற்கொண்டிருந்தது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்பாக இன்று எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சோசலிச இளைஞர் அமைப்பினால் இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செல்லும் இராஜகிரிய – சரண வீதி இன்று பிற்பகல் தற்காலிகமாக மூடப்பட்டது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 4 பெண்கள் உள்ளிட்ட 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வட மாகாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த 21 பேர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
வவுனியா இறம்பைக்குளத்தில் 21.01.2002இல் மரணித்த தோழர்கள் வாசன் (இராஜரட்ணம் ஜெயச்சந்திரன் – யாழ்ப்பாணம்), சத்தியா (கைலாசப்பிள்ளை செந்தமிழ்செல்வன்) ஆகியோரது 21ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
வவுனியா நொச்சிமோட்டையில் 21.02.1992இல் மரணித்த தோழர்கள் நிதி (இராசையா மோகன் – பாலையடிவட்டை), அகிலன் (அந்தோனி இராஜேந்திரன் – மட்டக்களப்பு) ஆகியோரது 31ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
19.02.2016இல் மரணித்த யாழ். நெடுந்தீவை பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரி முன்பாக அமைந்துள்ள குழாய்க்கிணறு பழுதடைந்தமையால் அதனை திருத்தித் தருமாறு பாடசாலை சமூகத்தினர் மற்றும் பொது அமைப்புகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் கோரிக்கையை ஏற்று வவுனியா நகரசபையினால் குழாய் கிணறு திருத்தப்பட்டு மாணவர்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன்(முகுந்தன்) அவர்களின் 78ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, வவுனியா, கோயில்குளம், உமாமகேஸ்வரன் நினைவில்ல வளாகத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் பொது நூல்நிலையத்தினை பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு இன்று (18.02.2023) காலை 10.30மணியளவில் இடம்பெற்றது. இந் நூலகம், கடந்த 1992 ம் ஆண்டு, செயலதிபரின் 03ம் ஆண்டு நினைவு நாளன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட போதிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் காணப்பட்ட அசாதாரண நிலைமைகள் காரணமாக தொடர்ச்சியாக இயங்க முடியாத நிலையில் இருந்தது.