ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தில் இருந்து நாட்டின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இரண்டரை மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த தொகை அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றுக்காக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 3 நடமாடும் அம்சமும் இதில் உள்ளடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நடமாடும் அலகுகளும் சூரிய சக்தியில் இயங்கும் மருத்துவமனையுடன், மகளிர் மருத்துவ பிரிவு மற்றும் அனைத்து மருத்துவ உபகரணங்களுடன் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவொரு அவசர நிலையிலும் தேவையான பிரதேசங்களில் சுகாதார சேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு தயாராக உள்ள இந்த நடமாடும் வாகனங்களின் பெறுமதி ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.