உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையில் யார் மேற்கொண்டது என்பது தனக்குத் தெரியும் எனவும் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தால், அதனை வௌிப்படுத்துவதற்கு தான் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டியில் இன்று அது தொடர்பில் தௌிவுபடுத்தினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது என்பது தனக்குத் தெரியும் எனவும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் பயங்கரவாதிகள் தொடர்பிலான விடயம் சரியானது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். Read more
தோழர் ஆர்.ஆர் அவர்களின் நினைவாக சுழிபுரம் கிழக்கு கண்ணகை அம்மன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து அடியாளர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. புளொட் தலைவர் த.சித்தார்த்தன் (பா.உ), வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் சச்சிதானந்தன் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தார்கள். 

திரு. பொன்னுத்துரை இராஜகுமாரன் அவர்கள்
இந்தியாவும் இலங்கையும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் ஊடாக சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நோக்கத்தை விரிவுப்படுத்த முயல்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரண்டாயிரமாம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இலங்கையின் ஏற்றுமதி திறனை மேம்படுத்துவதில் அதன் நோக்கத்தை சிறப்பாக செயற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 408 பேருக்கு காணி உறுதி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இலவசமாக 2 மில்லியன் காணி உறுதிகளை வழங்கும் உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்த காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏனைய சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா – வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி தின பூஜை வழிபாடுகளின் போது சிலர் கைது செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதனைத் தெரிவித்துள்ளது.