தெல்லிப்பளை இந்து இளைஞர் மன்றத்தினால் புதிதாக புனரமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிட திறப்புவிழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகன், புளொட் தலைவர் த. சித்தார்த்தன்(பா.உ), தெல்லிப்பளை இளைஞர் சேவை மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சிரேஸ்ட உபதலைவர் வேலாயுதம் நல்லநாதரின் (ஆர்ஆர்) நினைவு நிகழ்வில் நேற்றையதினம் (23.03.2024) கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்காலிக விசாவில் கனடாவுக்குள் பிரவேசிப்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கனேடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இது தொடர்பான அறிவிப்பை விடுத்துள்ளார். கனடாவில் தற்போது 6.2 என்ற வீதத்தில் தற்காலிகக் குடியிருப்பாளர்கள் காணப்படுகின்றனர் என்றும் இந்த எண்ணிக்கையை வரவிருக்கும் இலையுதிர் காலத்தில் 5 வீதமாகக் குறைப்பதற்கு ஆளும் லிபரல் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். கனடாவுக்குத் தற்காலிக விசாவில் வருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் வீட்டு வசதி சுகாதாரம் போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இலங்கையின் குறைந்த கட்டண விமான சேவையான குவைளயுசை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் கட்டுநாயக்க மற்றும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த விமான சேவையானது ஆரம்பத்தில் வாரம் இருமுறை இடம்பெறவுள்ளது. இதற்கான ஒரு வழி கட்டணமாக 74இ600 ரூபா அறிவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டுநாயக்கவிலிருந்து டுபாய்இ மாலே மற்றும் சென்னைக்கு நேரடி விமான சேவைகளை முன்னெடுத்து வருகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நேற்று முன்தினம் 22ஆம் திகதி வௌியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம்(CID) அழைப்பு விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தியவரை தமக்கு தெரியுமென மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இந்தநிலையில், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவாரென பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் குறிப்பிட்டார்.
இலங்கையில் மக்டொனால்ட்ஸ் உணவகத்தின் கிளைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. அதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி வரை மக்டொனால்ட்ஸ் உணவகத்தின் 12 கிளைகள் மூடப்படும் என கொழும்பு வர்த்தக நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், அபான்ஸ் நிறுவன பங்காளராக இருந்த மக்டொனால்ட்ஸ் நிறுவனம் அதிலிருந்து விலகியுள்ளது. அபான்ஸ் நிறுவனம், இலங்கையில் அதனுடைய தரத்தை தக்க வைக்காததே இதற்கான காரணமாக கூறப்படுகின்றது.