தற்காலிக விசாவில் கனடாவுக்குள் பிரவேசிப்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கனேடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இது தொடர்பான அறிவிப்பை விடுத்துள்ளார். கனடாவில் தற்போது 6.2 என்ற வீதத்தில் தற்காலிகக் குடியிருப்பாளர்கள் காணப்படுகின்றனர் என்றும் இந்த எண்ணிக்கையை வரவிருக்கும் இலையுதிர் காலத்தில் 5 வீதமாகக் குறைப்பதற்கு ஆளும் லிபரல் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். கனடாவுக்குத் தற்காலிக விசாவில் வருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் வீட்டு வசதி சுகாதாரம் போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

கடந்த ஆண்டு பத்து இலட்சம் பேர் கனடாவுக்குள் வந்துள்ளனர்.

மொத்தமாக 40 இலட்சம் பேர் வரையில் தற்போது கனடாவில் தங்கியுள்ளனர். இதன் காரணமாக புதிய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக வேலைவாய்ப்பு அமைச்சர் ராண்டி பிச னோல்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.