ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். காலியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இதனை குறிப்பிட்டார். அரசியயலமைப்பிற்கு அமைவாக, ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கி முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அவர் சுட்டிக்காட்டினார். இதனிடையே, ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என Daily Mirror பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. Read more
யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று வருகை தந்திருந்தனர். இதன்போது குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன்இ நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்ததால் பதற்றநிலை ஏற்பட்டது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியான நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக பிரதேச மக்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக பொதுமக்கள் பல்வேறு பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத சம்பளம், எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத ஓய்வூதிய சம்பளக் கொடுப்பனவும் எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, சம்பளப் பிரச்சினையை முன்வைத்து கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க ஆசிரியர் – அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளது.