பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களது வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி, பரிசுகள் வழங்கப்படுவதாக அறிவித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இணைப்புகளுக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இலங்கை அவசர கணினி குற்றத்தடுப்பு பிரிவு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. அதன் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு முன்னர் அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்துமாறு அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த இணைப்புகளுக்குள் உட்பிரவேசிப்பதன் ஊடாக, சமூக ஊடக பாவனையாளர்களின் தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை, வங்கி கணக்கு விபரங்கள் உள்ளிட்ட பெறுமதியான தரவுகள் மோசடி செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை அவசர கணினி குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.