Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் கட்சியினதும் சிரேஷ்ட உபதலைவரான, தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் நினைவாக..
தோழர்.ஆர்.ஆர் எனும் அமரர் நல்லநாதர் பெயரில் அவரது குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில், செயலதிபரின் நினைவில்லத்தில் “பொதுமக்களுக்கான இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கும் நிலையம்” எனும் செயல்திட்டம் இன்றையதினம் கழகத்தின் (புளொட்) தேசிய அமைப்பாளர் தோழர்.பீற்றர் அவர்களின் முன்னிலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தோழர்.ஆர்.ஆர் அவர்களின் முப்பத்தியொராம் நாளுக்கு முன்பாக இத்திட்டம் முழுமையடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Read more

திருத்தங்களுடன் கூடிய பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 59 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி 24 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் கூடிய பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூல நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.  இதன் முதற்கட்டமாக தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 50 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் தனியாராலும், இலங்கை போக்குவரத்து சபையாலும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பஸ்களிலும் CCTV கெமராக்களை பொருத்துவது கட்டாயமாக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். Read more

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் இன்று (05) பிற்பகல் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலவசக் கல்வி – இலவச சுகாதாரம் உள்ளிட்ட பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டித்து இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுடன்  ஏனைய பல்கலைக்கழக மாணவர்களும் இதில் இணைந்து கொண்டிருந்தனர்.

பாகிஸ்தானின் 24 ஆவது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரிஃப்  (Shehbaz Sharif) பதவியேற்றுள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் ஆரிஃப் அல்வி (Arif Alvi), ஷெபாஸ் ஷெரிஃப்-க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கடந்த மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக அந்நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி நீடித்து வந்தது. Read more

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை அரசாங்கத்தினூடாக பொறுப்பேற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தை கடனுடன் விற்பனை செய்ய முடியாமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் நேற்று(04) அமைச்சரவைக்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக இன்று(05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்று நள்ளிரவு 12 மணி முதல் பல்வேறு ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. தமது சம்பளம் குறைக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஆகியோர் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் இணையவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் K.D.D.பிரசாத் தெரிவித்துள்ளார். குறித்த பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதிலும் சாதகமான பதில் கிடைக்கப்பெறாமையின் காரணமாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார். Read more

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகாவை கட்சி உறுப்புரிமை மற்றும் அவர் வகிக்கும் பதவியில் இருந்து இடைநிறுத்துவதற்கான செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்திக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவு மீள நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைகள் இன்றைய தினம், கொழும்பு மாவட்ட நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தில் இருந்து நாட்டின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இரண்டரை மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த தொகை அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றுக்காக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 3 நடமாடும் அம்சமும் இதில் உள்ளடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 2005ஆம் ஆண்டு பேலியகொட பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார்.