தற்காலிக விசாவில் கனடாவுக்குள் பிரவேசிப்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கனேடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இது தொடர்பான அறிவிப்பை விடுத்துள்ளார். கனடாவில் தற்போது 6.2 என்ற வீதத்தில் தற்காலிகக் குடியிருப்பாளர்கள் காணப்படுகின்றனர் என்றும் இந்த எண்ணிக்கையை வரவிருக்கும் இலையுதிர் காலத்தில் 5 வீதமாகக் குறைப்பதற்கு ஆளும் லிபரல் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். கனடாவுக்குத் தற்காலிக விசாவில் வருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் வீட்டு வசதி சுகாதாரம் போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. Read more
இலங்கையின் குறைந்த கட்டண விமான சேவையான குவைளயுசை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் கட்டுநாயக்க மற்றும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த விமான சேவையானது ஆரம்பத்தில் வாரம் இருமுறை இடம்பெறவுள்ளது. இதற்கான ஒரு வழி கட்டணமாக 74இ600 ரூபா அறிவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டுநாயக்கவிலிருந்து டுபாய்இ மாலே மற்றும் சென்னைக்கு நேரடி விமான சேவைகளை முன்னெடுத்து வருகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நேற்று முன்தினம் 22ஆம் திகதி வௌியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம்(CID) அழைப்பு விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தியவரை தமக்கு தெரியுமென மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இந்தநிலையில், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவாரென பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் குறிப்பிட்டார்.
இலங்கையில் மக்டொனால்ட்ஸ் உணவகத்தின் கிளைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. அதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி வரை மக்டொனால்ட்ஸ் உணவகத்தின் 12 கிளைகள் மூடப்படும் என கொழும்பு வர்த்தக நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், அபான்ஸ் நிறுவன பங்காளராக இருந்த மக்டொனால்ட்ஸ் நிறுவனம் அதிலிருந்து விலகியுள்ளது. அபான்ஸ் நிறுவனம், இலங்கையில் அதனுடைய தரத்தை தக்க வைக்காததே இதற்கான காரணமாக கூறப்படுகின்றது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்தியகுழுக் கூட்டம் வவுனியாவில் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இன்று (23.03.2024) சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இதன்போது சமகால அரசியல் நிலைமைகள், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், கட்சியின் நிர்வாக விடயங்கள் என்பன தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் 31ஆம் நாள் நினைவு தினம் இன்று வவுனியா கோயில்குளம் உமாமகேஸ்வரன் நினைவில்லத்தில் அனுஷ்டிக்கப்படுகின்றது. வீட்டுக் கிருத்திய கிரியைகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் தோழர்.ஆர்.ஆர் இன் பெயரில் அவரது குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்பில், ‘பொதுமக்களுக்கான இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கும் நிலையமும்’ திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் அவரது நினைவாக தாக சாந்தி நிலையம் அமைக்கப்பட்டு சிற்றுண்டி குளிர்பானம் வழங்கப்பட்டதோடு, மதிய போசனமும் வழங்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் உள்ள 1,700,000 பாடசாலை மாணவர்களுக்காக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடளித்துள்ளார். குறித்த முறைப்பாட்டை கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து வெளியிட்டிருந்தார். அதன்போது ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் தமக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி கூறியிருக்கும் கருத்து பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எஞ்சிய நிதியுதவியையும் இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இலங்கை தகுதி பெற்றிருப்பது வெற்றி எனவும் பிரதமர் தெரிவித்தார். அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் புதிய சத்திரசிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை அண்மையில் சந்தித்ததாக பிரதமர் தெரிவித்தார். நாடு வளர்ச்சியை நோக்கிய நிலையான பாதையை அடைந்துள்ளதால், சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக பிரதமர் கூறினார்.
பிரதமர் தினேஸ் குணவர்தன அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீன வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த நாட்டு பிரதமரின் அழைப்பிற்கிணங்க பிரதமர் தினேஸ் குணவர்தன சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் தினேஸ் குணவர்தன எதிர்வரும் 30ஆம் திகதி வரை அங்கு தங்கியிருந்து பல தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.