இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்திலேயே அதனை பெற்றுக்கொடுக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் வௌிநாட்டவர்களுக்கு விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென அவர் கூறினார். வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளின்றி உடனடியாக இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். Read more
கிரிஸ்டல் சிம்பனி என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலில் 186 பயணிகளும் 429 பணிக்குழாமினரும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீனா அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே குறித்த கப்பலில் வந்துள்ளனர். அவர்கள் கொழும்பு மற்றும் காலி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையில் யார் மேற்கொண்டது என்பது தனக்குத் தெரியும் எனவும் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தால், அதனை வௌிப்படுத்துவதற்கு தான் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டியில் இன்று அது தொடர்பில் தௌிவுபடுத்தினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது என்பது தனக்குத் தெரியும் எனவும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் பயங்கரவாதிகள் தொடர்பிலான விடயம் சரியானது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
தோழர் ஆர்.ஆர் அவர்களின் நினைவாக சுழிபுரம் கிழக்கு கண்ணகை அம்மன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து அடியாளர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. புளொட் தலைவர் த.சித்தார்த்தன் (பா.உ), வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் சச்சிதானந்தன் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தார்கள். 

திரு. பொன்னுத்துரை இராஜகுமாரன் அவர்கள்
இந்தியாவும் இலங்கையும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் ஊடாக சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நோக்கத்தை விரிவுப்படுத்த முயல்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரண்டாயிரமாம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இலங்கையின் ஏற்றுமதி திறனை மேம்படுத்துவதில் அதன் நோக்கத்தை சிறப்பாக செயற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 408 பேருக்கு காணி உறுதி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இலவசமாக 2 மில்லியன் காணி உறுதிகளை வழங்கும் உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்த காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏனைய சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா – வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி தின பூஜை வழிபாடுகளின் போது சிலர் கைது செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கை கடலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த மேலும் 32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்புகளில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இதேவேளை, இந்திய மீனவர்கள் இலங்கை கடலுக்குள் வருவதை தடுக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. இந்த நிலையில், நேற்றிரவு யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.