DSC_0653 (1)இன்றைய தினம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட் அமைப்பினரால்) வவுனியாவில் உள்ள புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரனின் நினைவு நூலகத்தில் 24 வது வீர மக்கள் தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (டி.பி.எல்.எப்) உபதலைவர்களில் ஒருவரும், முன்னாள் வவுனியா நகர பிதாவுமான ஜி.ரி.லிங்கநாதனின் தலைமையில் நடைபெற்ற இன்றைய ஆரம்ப நிகழ்வாக தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமரர் அமிர்தலிங்கத்தின் உருவப்படத்துக்கு இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வவுனியா பிரதேச சபைத் தலைவர் திரு.சிவலிங்கம் அவர்களினால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலச்சந்திரன், முன்னாள் வவுனியா உப நகரபிதா க.சந்திரகுலசிங்கம் (மோகன்), பருத்தித்துறை முன்னாள் நகரசபைத் தலைவர் வின்சண்ட் கென்னடி, உட்பட புளொட் முக்கியஸ்தர்கள், கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்களினால் மலரஞ்சலி செலுத்தப் பட்டதுடன், வீரமக்கள் தின நிகழ்வுகள் வவுனியாவில் ஆரம்பமாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து புளொட் அமைப்பின் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரனின் நினைவில்லத்தில் (சமாதியில்) புளொட் அமைப்பின் கொடியும் முன்னாள் வவுனியா உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டு 24 வது வீர மக்கள் தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் தலைமை உரையாற்றிய புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (டி.பி.எல்.எப்) உபதலைவர்களில் ஒருவரும், முன்னாள் வவுனியா நகர பிதாவுமான ஜி.ரி.லிங்கநாதன் “இன்றைய யுத்தம் இல்லாத சூழலிலும், இராணுவ தேவைக்கென பல கோடி ரூபாக்களை செலவு செய்யும் இலங்கை அரசு, தமிழ்மக்களின் நியாயமான தீர்வுக்காக போராடி மரணித்த அனைத்து இயக்க உறுப்பினர்களின் குடும்பங்களின் புனர்வாழ்வுக்காக உதவி புரிய வேண்டும் எனவும்,இதனை கூட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சிகள் மட்டுமல்ல அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி செயல்பட வேண்டுமென” கேட்டுக் கொண்டார்.

இன்று ஆரம்பமாகிய வீரமக்கள் தின நிகழ்வுகள் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெற்று எதிர்வரும் 16ம் திகதி செவ்வாய்க்கிழமை புளொட் அமைப்பின் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரனின் நினைவில்லத்தில் (சமாதியில்) மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுவதுடன் அஞ்சலிக் கூட்டமும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

DSC_0653 (1)
DSC_0623 (1)
DSC_0624 (1)
DSC_0629 (1)
DSC_0643 (1)
DSC_0650 (1)
DSC02109 (1)
DSC02126 (1)
DSC02130 (1)
DSC02133 (1)