Header image alt text

உண்ணாரவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தம்பிராசா மீது கழிவொயில் வீச்சியுள்ளனர்

1வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த வலியுறுத்தியும் இடம்பெயர்ந்த மக்களுக்கு இடைநிறுத்தப்பட்ட நிவாரணத்தை மீண்டும் வழங்கக் கோரியும்
யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை முதல் உண்ணாரவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அடக்கு முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் கழிவொயில் வீச்சியுள்ளனர். இதுதொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.

தம்பிராசாவின் சாகும்வரையான உண்ணாவிரதம் தொடர்கிறது-

1thampi..போரினால் இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலும் வாழும் வலிகாமம் வடக்கு மற்றும் சம்பூர் மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவரும், வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டவருமான தம்பிராசா அவர்கள் கடந்த 16ஆம் திகதிமுதல் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை தெரிந்ததே.

Read more

கோயில்குளம் முதியோர் இல்ல முதியோர்க்கு உதவி-

IMG_6530IMG_6485யாழ். வடலியடைப்பு, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டவரான 17.12.2013 அன்று இறைபதமடைந்த கிருஷ்ணர் கமலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தையொட்டி கனடாவிலுள்ள அன்னாரின் உறவுகளின் நிதியுதவியின்கீழ் கோவில்குளம் சிவன்கோவில் முதியோர் இல்லத்தைச் சேர்ந்த முதியோர்க்கான சிறப்பு உணவும், அத்தியாவசிய பொருட்களும் நேற்றையதினம் (17.01.2014) வழங்கி வைக்கப்பட்டன. புளொட் முக்கியஸ்தரும், வவுனியா முன்னாள் உப நகரபிதாவும், கோவில்குளம் இளைஞர் கழகத் தலைவருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் மேற்படி முதியோர்க்கான சிறப்பு உணவையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வவுனியா கிளை முக்கியஸ்தர்கள் கண்ணன், ராஜா உள்ளிட்ட பல பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்களுக்கு ‘ஆவா’ குழு கொலை அச்சறுத்தல்-

யாழில் கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆவா குழுவைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக யாழ். ஊடகவியலாளர்கள் ஐவர் முறைப்பாடு செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆவா குழுவினரின் வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பதில் நீதவான் எம். திருநாவுக்கரசு அவர்களை எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் நீதிமன்ற வாசலில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் ஐவரும் ஆவா குழுவை நீதிமன்றத்திற்கு கொண்டுவரும்போது புகைப்படம் எடுக்க முற்பட்டுள்ளனர். இதனைத் தடுக்கமுற்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஊடகவியலாளர்கள் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என மிரட்டியதோடு ‘உங்கள் அனைவரையும் எமக்குத் தெரியும் உங்கள் வீடுகளும் தெரியும் உங்கள் அனைவரையும் வெட்டுவோம்’ என மிரட்டியுள்ளனர். உடனே ஊடகவியலாளர்கள் இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலீஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

13ஆவது திருத்த சட்டத்தின்படி மாகாண சபைகள் நேரடி முதலீடுகளை பெற முடியும்-

13th amentmentஅரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின்படி மாகாண சபைகள் மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடியும். ஏற்கனவே வடமேல் மாகாண சபையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என பொருளாதார நிபுணரும் கொள்கை மற்றும் ஆய்வு நிலையத்; தலைவருமான சமந்த கெலேகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற கிழக்கு மாகாணத்தில் முதலீடு செய்யுங்கள் என்ற சர்வதேச முதலீட்டு ஊக்குவிப்பு மாநாட்டின் ஆரம்ப வைவபத்தில் கலந்துகொண்டு கருத்துத் வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன், கிழக்கு மாகாண அமைச்சர்கள், அதிகாரிகள், உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், ராஜதந்திரிகள், பொருளாதார நிபுணர்கள், ஆலோசகர்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.

மன்னார் மனித புதைகுழியிலிருந்து அணிகலன்கள் மீட்பு-

mannarமன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதைகுழி நேற்று எட்டாவது தடவையாக தோண்டப்பட்டபோது அதிலிருந்து மேலுமொரு மனித மண்டையோட்டின் சிதைவுகள், உடைந்த காப்பு மற்றும் முத்து மணிகள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மன்னார் மனித புதைகுழி, நீதவான் ஆனந்தி கனகரட்ணம், அநுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரட்ன முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிமுதல் மதியம் 1 மணிவரை மீண்டும் தோண்டப்பட்டது. இதன்போது ஒரு மனித எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் துண்டாக்கப்பட்ட மண்டையோட்டின் துண்டுகள், உடைந்த காப்பு, முத்து மணிகள் சிலவும் குறித்த புதைகுழியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய குறித்த புதைகுழியிலிருந்து இதுவரையில் 37 எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ். தமிழ் பெண்களும் இராணுவத்தில் சேர்க்கப்படுவர்-உதய பெரேரா-

unnamed3கிளிநொச்சியை போன்று யாழ். தமிழ் பெண்களும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார். வெற்றிலைக்கேணி உணவத்தை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற விஷேட பூஜை வழிப்பாட்டில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர் கேள்வி ஒன்றிக்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழில் உயர் பாதுகாப்பு வலயம் என்று ஒன்று இல்லை பாதுகாப்புக்காகவே இராணுவம் இங்கு நிலைகொண்டுள்ளது அங்கு இராணுவத்திற்கு தேவையான காணிகள் எடுக்கப்பட்டு ஏனையவை மக்களிடம் விரைவில் கையளிக்கப்படும். யாழில் இருந்த மினி முகாம்கள் தற்போது கட்டம் கட்டமாக அகற்றப்பட்டு வருகின்றது. விரைவில் அனைத்து மினி முகாம்களும் அகற்றப்பட்டு விடும். கிளிநொச்சியில் இராணுவத்திற்கு தமிழ் பெண்களை இணைத்து கொண்டது போல எதிர்காலத்தில் யாழ்ப்பாண தமிழ் பெண்களும் இராணுவத்தில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பின் ஏழு உறுப்பினர்கள் இடைநிறுத்தம்-

maaviயாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏழு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. பிரதேச சபையில் முன்வைக்கப்பட்டிருந்த வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் வகையில் இவர்கள் தங்களின் வாக்குகளை பயன்படுத்தியமைக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்பட்டது. இதற்கு எதிராக 12 பேர் வாக்களித்திருந்தனர். அவர்களில் ஐந்து ஈ.பி.டீ.பி உறுப்பினர்களை தவிர்த்து, ஏனையவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களாவர். அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் அவர்களை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக இடைவிலக்க கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தீர்மானித்துள்ளார். அதன்படி அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் வாக்களிப்பு விண்ணப்பங்கள்-

anjal vaakkalippu 1எதிர்வரும் மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்களில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 20ம் திகதி முதல் விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் திணைக்களம்; அறிவித்துள்ளது. இதன்படி இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ம் திகதிவரையில் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், குறித்த இரண்டு மாகாணங்களையும் சேர்ந்த அரசாங்க ஊழியர்கள் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது. மேல் மற்றும் தென் மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 30ம் திகதிமுதல் அதற்கான வேட்புமனுக்கள் கோரப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொன்சேகாவின் வாகனம் சிறைபிடிப்பு-

sarathஉரிய அனுமதி பெற்றுக் கொள்ளாமல், ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டு, தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட வாகனம் ஒன்றை நேற்று பொலீசார் காலி, பலபிட்டிய பகுதியில் சிறைபிடித்துள்ளனர். இந்த வாகனம் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பிரசார வாகனம் என்று தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் மேற்படி பிரதேசத்தில் கூட்டம் ஒன்றை நடத்த முற்பட்டபோதும், அதற்கான அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என தெரிவித்து, பொலீசார் அதனை இடைநிறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்கடத்தலை தடுக்கும் இலங்கையின் நடவடிக்கைக்கு ஆஸி வரவேற்பு-

ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத படகு பயணங்களை தடுத்து நிறுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் வரவேற்றுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியாவின் பிரதமர் டோனி அபட்டின் விசேட தூதுவர் மேஜர் ஜெனரல் என்ட்ரா ஜேம்ஸ் மொலான் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் நேற்றையதினம் கொழும்பில் வைத்து வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்போது ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத படகு பயணங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரண தண்டனை கைதிகள் குறித்த தகவல்கள்-

imagesCAQUTQUMஇலங்கையில் உள்ள சிறைகளில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தொடர்பான அறிக்கை ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ். விதானகே இதனைத் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குறித்த விபரங்களும் உள்ளடக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வவுனியா காத்தான்கோட்டத்தில் மக்கள் சந்திப்பு-

IMG_7265-1024x682 IMG_7266-1024x682 IMG_7267-1024x682 IMG_7268-1024x682 IMG_7269-1024x682வவுனியா காத்தான்கோட்டத்தில் நேற்றையதினம் மாலை 4மணியளவில் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் புளொட் மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் வவுனியா நகரபிதாவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன்(விசு), புளொட் முக்கியஸ்தரும் முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழகத் தலைவருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களான தியாகராஜா, இந்திரராஜா மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வவுனியா கிளை முக்கியஸ்தர்களான குகன், ராஜா ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். இக்கலந்துரையாடலில் காத்தான்கோட்டம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், கோயில் தலைவர், ஊர்ப் பிரமுகர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்ததுடன், தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். இந்த கலந்துரையாடலின்போது மக்களின் அன்றாட பிரச்சினைகள், அத்தியாவசிய தேவைகள் மற்றும் கிராமத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பிரித்தானிய தமிழ் மக்கள் ஒன்றிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்-

fdffdfwwwwCaptureதைப்பொங்கல் தினத்தன்று (14.01.2014) காலை பிரித்தானிய தமிழ் மக்கள் ஒன்றிய பிரதிநிதிகள் யாழ்ப்பாண நிலைமைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக வட்டுக்கோட்டை பகுதியில் வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளனர். இக் கலந்துரையாடலின்போது அண்மைக்காலத்தில் வடமாகாண சபை எதிர்நோக்கும் சவால்கள் பிரதேசசபைகள் எதிர்நோக்கும் சவால்கள் என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன்போது வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி.ஐ.நாகரஞ்சினி போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உதவித்திட்டங்கள் போதுமானவையாக இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். இக் கலந்துரையாடலின்போது வடமாகாண சபையை இயக்குவதில் திட்டமிட்டு உருவாக்கப்படும் தடைகள் பற்றியும் மிகத்தெளிவான விளக்கத்தை வடமாகாண சபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெளிவுபடுத்தினார். இந்த சந்திப்பில் வட்டுக்கோட்டை பகுதி கல்வியியலாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கொக்குவில் நாமகள் வித்தியாலய பொங்கல் விழாவும் கால்கோள்விழாவும்-

cvcvcvcvcயாழ். கொக்குவில் நாமகள் வித்தியாலயத்தில் பொங்கல் விழாவும், தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கான கால்கோள்விழாவும் அதிபர் திரு. சிவநாதன் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்றுகாலை 9.30அளவில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பிரதம விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக நல்லூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. அருணாசலம் அகிலதாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என பெருமளவிலானவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த வைபவத்தின்போது தரம் ஒன்றுக்கான புதிய மாணவர்கள் வைபவ ரீதியாக வரவேற்கப்பட்டனர். அத்துடன் சிறுபிள்ளைகளின் கலைநிகழ்வுகளும், பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

கோப்பாய், கந்தர்மடம் பாடசாலை கால்கோள்விழா- வட மாகாணசபை உறுப்பினர் த. சித்தார்த்தன் பங்கேற்பு-

sssssயாழ். கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயத்தில் தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கான கால்கோள்விழா நேற்றுக்காலை 9.30மணியளவில் அதிபர் திரு. ஆனந்தராஜா அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் பிரதம விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர். இந்த வைபவத்தின்போது புதிய மாணவர்கள் வைபவ ரீதியாக மகிழ்ச்சிகரமாக வரவேற்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து யாழ். கந்தர்மடம் சைவப்பிரகாசா வித்தியாசாலையில் தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கான கால்கோள்விழா அதிபர் திரு. இராமநாதன் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்த வைபவத்தில் பிரதம விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், கல்வி ஆலோசகர் திருமதி மரியதாஸ் அவர்களும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரும் கலந்துகொண்டிருந்தனர்.

தம்பிராசாவின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம்-

efe1போரினால் இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலும் வாழும் வலிகாமம் வடக்கு மற்றும் சம்பூர் மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவரும், வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டவருமான தம்பிராசா நேற்று 16ஆம் திகதி முற்பகல் 11.04 அளவில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார். தனது கோரிக்கைகள் அடங்கிய ஜனாதிபதிக்கான மகஜரை அவர் நேற்று யாழ். அரச அதிபரிடம் கையளித்துள்ளார்.

இந்நிலையில் இன்று(17.01.2014) தன்னைச் சந்தித்து செவ்வியொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக வந்த ஒரு ஊடகவியலாளர், தனது உண்ணாவிரதப் போராட்டம் சுயநல நோக்கம் கொண்டதென்றும், பல இணையத்தளங்கள் இது சம்பந்தமாக தங்களது அபிப்பிராயங்களை வெளியிட்டிருப்பதாகவும் தெரிவித்ததாக கூறினார். இதுபற்றி தம்பிராசா மேலும் கூறுகையில், Read more

வெளிவிகார செயலாளராக ஷெனுகா நியமனம்-

senuka (2)வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக ஷெனூகா செனேவிரட்ன நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அதன் செயலாளராக இருந்த கருணாதிலக அமுனுமக ஓய்வு பெற்றதன் பின்னர், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஷெனூகா செனேவிரட்ன இதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளராக பணியாற்றிவந்தார். அதற்கு முன்னர் அவர் பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்துக்கான உயர்ஸ்தானிகராகவும், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதியாகவும் செயற்பட்டுள்ளார். அத்துடன் நிவ்யோர்க் மற்றும் பிரஸல்ஸ் போன்றவற்றின் உதவி தூதுவராகவும் செயற்பட்டு வந்திருந்தார்.

350 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்-

kilakku pattathariசப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளில் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ் பட்டதாரிகள் போதிய அளவானோர் இல்லாத காரணத்தால் இலங்கையின் அனைத்து மாகாணத்திலிருந்தும் சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதற்கமைய 600 பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் மாகாண கல்வி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றிருந்தன. இவர்களுக்கான நேர்முகப்பரீட்சை கடந்தமாதம் மாகாணசபை கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்டது. இவ் நேர்முகப் பரீட்சையில் தகைமையுடைய 350 பட்டதாரிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

மன்னாரில் புகைத்தலுக்கு எதிராக ஊர்வலம்-

mannar oorvalam (3)mannar oorvalam (2)புகைத்தலற்ற ஆரோக்கிய வாழ்வு எனும் தொனிப்பொருளில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஏற்பாடு செய்திருந்த புகைத்தலுக்கு எதிரான விழிர்ப்புணர்வு ஊர்வலம் இன்றுகாலை மன்னாரில் இடம்பெற்றது. மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன் இன்றையதினம் காலை 9.30 மணியளவில் mannar oorvalamமன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.என்.சில்றோய் தலைமையில் குறித்த விழிர்ப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமானது. குறித்த ஊர்வலம் மன்னார் மாவட்டச் செயலக வீதியூடாக சென்று மன்னார் பஸார் பகுதிக்குச் சென்று மீண்டும் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணியினை வந்தடைந்தது. குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் புகைத்தலுக்கு எதிராக பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பாடசாலை மாணவர்கள், மருத்துவ மாதுக்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மன்னார் கிளை பணியாளர்கள் உட்பட நூற்றுக் கணக்கானவர்கள் குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மக்களை விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்-

anarthamவெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. பெருக்கெடுத்துள்ள நீர்த் தேக்கங்கள் சிலவற்றின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பத்ரா கமலதாச குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு உன்னிச்சை, உருகாமம் உட்பட அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களின் சில குளங்கள் பெருக்கெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயினும், இந்த மாவட்டங்களின் ஏனைய நீர் நிலைகளின் நீர் மட்டங்களில் குறிப்பிடத்தக்களவு மாற்றம் ஏற்படவில்லை என்றும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தலைமைத்துவ பயிற்சியின் மூன்றாம் கட்டம் நாளை-

untitled4பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியின் மூன்றாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. நாடு முழுவதும் அமைந்துள்ள 21 நிலையங்களில் தலைமைத்துவ பயிற்சிகள் நடைபெறவுள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார். பயிற்சிகளில் கலந்துகொண்ட பின்னர் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தங்களை பதிவுசெய்துகொள்ள முடியும் என்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

111 தமிழக மீனவர்கள் விடுதலை-

cமுல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட 111 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தமிழகம், நாகபட்டினத்தைச் சேர்ந்த 111 மீனவர்களும் கடந்த டிசம்பர் 11ஆம் திகதி 15 படகுகளில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இம்மீனவர்கள் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுளளமை குறிப்பிடத்தக்கது.

ஆட்கடத்தல்காரர்கள் இலங்கை மற்றும் வியட்நாமில் கைது-

kadaththalkararkalசட்டவிரோதமாக ஆட்கடத்தலில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர்கள் சிலர் இலங்கை மற்றும் வியட்நாமில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வியட்நாம் தேசிய பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து தெற்கு வியட்நாம் பகுதியில் வைத்து வியட்நாம் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார். இலங்கை பொலிஸாரும் ஆட்கடத்தலுடன் தொடர்புபட்ட மூவரை கைது செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அது குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதேவேளை, கடந்த வாரங்களில் எவரும் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழையவில்லை என அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்புப் பிரிவினர் கூறுகின்றனர். படகுமூலம் சென்று அவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் கோரிய 1297பேர் மனுஸ் தீவிலும் 942 பேர் நௌவுரு தீவிலும் 1987 பேர் கிறிஸ்மஸ் தீவிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஆஸி குறிப்பிட்டுள்ளது.

தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை-

தமிழக மீனவர்களை இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட இடமளிக்க முடியாது என்று, இலங்கை மீனவர்கள் சங்கத்தின் தலைவர் எல்பர்ட் ஜஸ்டின் சொய்சா தெரிவித்துள்ளார். நேற்று தமிழக மீனவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அவர் த ஹிந்து பத்திரிகைக்கு இதனைத் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபடுவதில் சிக்கல் இல்லை. ஆனால் அவர்கள் முல்லைத்தீவு கடற்பகுதி வரையில் வந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றமையை அனுமதிக்க முடியாது. அவ்வாறு மீன்பிடியில் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பு மனுவுடன் தேசிய அடையாள அட்டை பிரதியும் அவசியம்-

unnamed3மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படும்போது வேட்பாளர்களின் தேசிய அடையாள அட்டையின் பிரதி இணைக்கப்பட வேண்டும் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த முறை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னரான நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்பட்டதால் இம்முறை தேசிய அடையாள அட்டையின் பிரதி கோரப்பட்டுள்ளது. மேல் மற்றும் தென்மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் பெப்ரவரி 6ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்கப்படும் என தேர்தல் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது. வேட்புமனு அறிவித்தல் வெளியிடப்பட்ட திகதியிலிருந்து பெப்ரவரி 5ஆம் திகதிவரை சுயேச்சைக் குழுக்களுக்கு கட்டுப்பணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். Read more

ஆயர்களை கைது செய்யுமாறு இராவண பலய கோரிக்கை-

ravanaஇறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரசாங்கத்தினால் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க முக்கியஸ்தர்களிடம் பொய்யான தகவல்களை வழங்கிய மன்னார் மற்றும் யாழ் ஆயர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு பொலிஸ் மா அதிபரிடம் இராவணா பலய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ரெப்பிடமே மேற்படி இரு ஆயர்களும் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளனர் என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டீபர் ரெப் வெளியிட்ட கருத்தை நாம் மிகவும் கடுமையாகக் கண்டிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ள இராவணா பலய, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோர் வழங்கிய பொய்யான தகவல்களின் அடிப்படையிலேயே ஸ்டீபன் ரெப் மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார் என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு முதல்வருக்கு புதிய அலுவலகம்-

wigneswaran_1654672gவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய அலுவலகத் திறப்பு விழாவில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இல. 26, யாழ். சோமசுந்தரம் வீதியிலுள்ள உள்ளூராட்சி அமைச்சின் புதிய அலுவலகம் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்ட நிலையில், முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தனது பணிகளை ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோருடன் எதிர்காலத்தில் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இதில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நிதி நிறுவனங்களில் அரச கரும மொழிக் கொள்கை அமுல்-

பொதுமக்கள் அடிக்கடி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் அரச சார்பற்ற நிதி நிறுவனங்களில் அரச கருமமொழி கொள்கையை நடைமுறைப்படுத்த உள்ளதாக அரச கருமமொழி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு மத்திய வங்கி ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ரணவக்க கூறியுள்ளார். அரச சார்பற்ற நிதி நிறுவனங்களில் அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மீளாய்வு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அரச கரும மொழி ஆணைக்குழு கூறுகின்றது. மக்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் மத்திய வங்கியினால் நிர்வகிக்கப்படும் நிதி நிறுவனங்களில் இந்த மீளாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அரச சார்பற்ற நிதி நிறுவனங்களில் அரச கருமமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசார்பற்ற நிறுவனங்களுக்கு தெளிவூட்டுமாறு மத்திய வங்கியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைய, மத்திய வங்கியினால் குறித்த நிறுவனங்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி, அரச கரும மொழியை நடைமுறைப்படுத்துவது குறித்து மீளாய்வு செய்யவுள்ளோம் என ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையின் கோரிக்கை தொடர்பில் அமெரிக்கா ஆய்வு-

americaஇலங்கையின் மனிதாபிமான விவகாரங்கள் குறித்த நிலைப்பாட்டை அமெரிக்கா மாற்றிக் கொள்ள வேண்டும் என இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அழைப்புக் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பதிலளித்துள்ளது. நேற்றையதினம் நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பிரதிப் பேச்சாளர் மேரி ஹாப்பிடம், செய்தியாளர் ஒருவர் இதுபற்றி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு நேரடியாகப் பதிலடிக்காத இராஜாங்கத் திணைக்களப் பிரதிப் பேச்சாளர் மேரி ஹாப், இந்த விவகாரங்களுக்குப் பதிலளிப்பது குறித்து இலங்கையுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளதாக ஏற்கனவே அமெரிக்கா கூறியுள்ளது. எமது தரப்பில் எந்த முன்னேற்றங்களும் இருக்கிறதா என்று பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளர்.

கொழும்பில் குடும்பநல உத்தியோகத்தர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்-

sukathara sitruliyar (4)sukathara sitruliyar (3)குடும்பநல உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆரப்பட்டம் காரணமாக கொழும்பு டீன்ஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. தமக்கு வழங்கப்படும் பிரசவ பயிற்சியை தாதியர்களுக்கும் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 3 வருடங்களை கொண்ட தமது பயிற்சிக் காலத்தின் ஒருபகுதியான பிரசவ தாதியர்களுக்கு வழங்கியமைக்கு எதிரப்பு தெரிவித்து குடும்பநல உத்தியோகத்தர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். சுமார் 2 மணித்தியாலங்களாக முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக டீன்ஸ் வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டு போக்குவரத்து பெரியளவில் பாதிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவர்-அமைச்சர் ராஜித-

sri &indiaஇலங்கைச் சிறைகளிலுள்ள அனைத்து இந்திய மீனவர்களும், படகுகளும் இன்றுமுதல் உடனடியாக விடுவிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இருநாட்டு மீனவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விவாதிக்கவென இந்தியா சென்றிருந்த அமைச்சர், நேற்று இந்திய வெளியுறவு மற்றும் விவசாய அமைச்சர்களைச் சந்தித்த பின்பே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இம்மாதம் 20ஆம் திகதி இருநாட்டு மீனவர்களிடையே நடைபெறவுள்ள பேச்சுக்களில் இலங்கை மீனவர்கள் பங்கேற்பர் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இருநாட்டு மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், இரு நாடுகளுக்குமிiடியலான கடல் வளத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பவை தொடர்பில் விவாதிக்கவென குழுவொன்று அமைக்கப்படுமென்றும், இதுபற்றி ஆராயவென ஒரு நிதியத்தை ஏற்படுத்த இந்திய முழுமையாக பண உதவிவழங்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கிழக்கு ஆசிரியர் வெற்றிடத்திற்கு பட்டதாரிகள் நியமனம்-

kilakku pattathariகிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் வெற்றிடங்களுக்காக 332 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்திற்கென 81 பட்டதாரிகளுக்கும், திருகோணமலை மாவட்டத்திற்கென 105 பட்டதாரிகளுக்கும், அம்பாறை மாவட்டத்திற்கென 54 பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்காக சிங்களமொழி மூலம் 92 பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் உடற்கல்வி பாடங்களை கற்பிப்பதற்காக பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடல் கொள்ளையர்களுடன் போராடுவதற்கு இலங்கை ஒத்துழைப்பு-

srilankaஇந்து சமுத்திரத்தில் கடல் கொள்ளைக்காரர்களை எதிர்கொள்ளவும் வளைகுடா நாடுகளின் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும் கடற் புலிகளை தோற்கடித்த இலங்கையின் அனுபவங்கள் பெரும் பயன்தரக்கூடியவை என வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா ஓமான் ட்றிபியூன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் பெரேரா, கடந்த ஜனவரி 14ஆம் திகதிமுதல் 16ஆம் திகதிவரை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மஸ்கற் சென்றிருந்தார். சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை செய்யவுள்ள இலங்கை, அரபு நாடுகளுக்கான தென் கிழக்காசிய நுழைவாயிலாக வரவுள்ளது. தென் கிழக்காசிய நாடுகளுக்கான கடல் பாதையில் உள்ள கொழும்பு துறைமுகம், பெரிய தாய்க் கப்பல்களையும் உள்வாங்கும் தகுதியுள்ளது. எனவே இலங்கை, வளைகுடா நாடுகளுக்கான மீள் ஏற்றுமதி மையமாக மாற முடியும். ஓமான் உட்பட வளைகுடா நாடுகள் கொழும்புக்கு அனுப்பிவைக்கும் பொருட்களை எம்மால் சிறு கப்பல்கள் மூலம் இந்த பிராந்தியத்திலுள்ள வேறு நாடுகளுக்கு அனுப்பிவைக்க முடியும் என பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நான் போராளியல்ல, எனக்கு புனர்வாழ்வளிப்பது விந்தையானது: அனந்தி-

anaநான் போராளியல்ல, என்னை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது விந்தையானது. கிளிநொச்சி மாவட்டத்தில் நான் அரச உத்தியோகஸ்தராக பணியாற்றியமை யாருக்கும் தெரியாது என வடக்கு மாகாணசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். சிங்களவர்களுக்கும் எனக்கும் இடையில் எவ்விதமான கருத்து முரண்பாடுகளும் இல்லை. மக்களின் பிரதிநியான நான் முதலமைச்சரின் அனுமதியுடனேயே வெளிநாட்டு பிரதிநிகளை சந்திக்கின்றேன் என்றும் அவர் கூறியுள்ளார். காணாமல் போனவர்களின் தகவல்களை திரட்டி வழங்கியுள்ளேன். இதற்காக எனக்கு புனர்வாழ்வளித்தால் அது விந்தையானதாகவே இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக வெளியான செய்தி தொடர்பில் கருத்துரைத்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் அவர் பரப்புரை செய்து வருவதாகவும், அதனைத் தடுப்பதற்காகவே அவருக்கு புனர்வாழ்வு அளிப்பது குறித்து ஆராயப்படுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

வெளிநாட்டிலிருந்து திரும்புவோரிடம் கொள்ளையிடும் கும்பல் கைது-

imagesCA2C7RO4வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்காக சென்று திரும்புவோரிடம் கொள்ளையிடும் கும்பல்லைச் சேர்ந்த நால்வரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கட்டுநாயக்க மற்றும் புறக்கோட்டை பஸ் நிலையத்தில் காத்திருந்தே இவ்வாறான கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து கார், ஆட்களை மயக்கும் குளிசைகள், வெளிநாட்டு சாரிகள், புகைப்படக்கருவி, வெளிநாட்டு பணம் உள்ளிட்டவையே மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்த நால்வரையும் மஹர நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலை சிற்றூழியர்களும் வேலை நிறுத்தம்-

sqவவுனியா பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்னால் இடம்பெற்ற இப்போராட்டத்தில் 6-2006 சுற்றறிக்கையை சரியாக அமுல்படுத்து, சகல தற்காலிக மற்றும் அண்மைய ஊழியர்களை நிரந்தரமாக்கு, 8 மணித்தியால காலவரையறைக்கு மேலதிகமாக கடமைக்கான உரிய கொடுப்பனவை பெற்றுக்கொடு, சீருடை கொடுப்பனவை ஒரே தடவையில் வழங்கு உட்பட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதுடன், நோயாளர்களின் உறவினர்களே அவர்களை வைத்தியசேவைக்கு அழைத்தும் சென்றிருந்தனர். இன்றுமதியம் 12 மணிவரை இடம்பெற்ற இப்போராட்டத்திற்கு உரியபலன் கிடைக்காத பட்சத்தில் தொடர்ச்சியாக தாம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீரில் மூழ்கிய வைத்தியர் உயிரிழப்பு, ஒருவரைக் காணவில்லை-

neeril moolkiதிருகோணமலை, குச்சவெளி 9ம் கட்டைப் பகுதியிலுள்ள நிலாவெளி கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று திருமலை, கோணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 30வயதான ஜெயரத்தினம் ரொபின்சன் என்கிற வைத்தியரே விபத்துக்குள்ளாகியுள்ளார். இவர் திருமலை வைத்தியசாலையின் வைத்தியராவார். அவரது சடலம் திருமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இன்று பிரேதப் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன. இதேவேளை, நிலாவெளி கடலில் மூழ்கிய சிறுவன் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். நேற்று குடும்ப உறவினர்களுடன் நீராடச் சென்றிருந்த வேளையே இவர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் பத்தேகம, நயாபாமுன பிரதேசத்தில் கிங் கங்கையில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இவர் கோதலாவல, உடுகம பகுதியைச் சேர்ந்த 49 வயதான செல்லையா சங்கராஜா எனத் தெரியவந்துள்ளது. நேற்று காணாமல் போன இவரைத் தேடும் பணிகளில் பத்தேகம பொலீசாரும், கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சியை சேர்ந்தவர் பிரான்ஸில் கைது-

Jeyanathanபயங்கரவாத குற்றச்சாட்டில் சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த கிளிநொச்சியை சேர்ந்த 35வயதான ஜெயநாதன் தர்மலிங்கம் பிரான்ஸ் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு சென்றிருந்த வேளையில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமான வேலைவாய்ப்புகள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு சென்ற சமயத்தில் பொலிஸார் இவரை உடனடியாக அடையாளம் கண்டு கைதுசெய்துள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும்; சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டுவரும் நபர்கள் பட்டியலில் அவருடைய பெயர் இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு 30ம் திகதி தொடக்கம் ஏற்பு-

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளின் வேட்பு மனு எதிர்வரும் ஜனவரி 30ம் திகதி தொடக்கம் பெப்ரவரி 6ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதேநேரம் சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்த முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு-

மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற சுகாதார சேவை சுற்றூழியர்கள் இன்று காலை பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இலங்கை ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சுமார் 200 இற்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் இவ் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 6.30 மணிக்கு ஆரம்பமான இப் பணிபகிஸ்கரிப்பு இன்றுபகல் 12 மணிவரை இடம்பெற்றுள்ளது. 6-2006 சுற்றறிக்கையை சரியாக அமுல்படுத்த வேண்டும், சகல தற்காலிக மற்றும் அமைய ஊழியர்களை நிரந்தரமாக்கப்பட வேண்டும், Read more

திருக்கேதீஸ்வரத்தில் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்-

thiruketheeswaramமன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி மீண்டும் நாளைய தினம் அகழப்படவுள்ளது. கடந்த டிசம்பர் 20ஆம் திகதி திருக்கேதீஸ்வரம் கோயில் வளாகப் பாதையில் நீர்க்குழாய் பொருத்தும் பணிகளின் பொருட்டு தோண்டப்பட்ட போது, மனித எலும்புகள் கண்டுபிடிப்பிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து படிப்படியாக அகழ்வு பணிகள் இடம்பெற்றன. இவ்வாறாக இதுவரையில் ஆறு தடவைகள் தோண்டப்பட்ட நிலையில் 30 மனித எலும்பு கூடுகளும், மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனோர் ஆணைக்குழு கிளிநொச்சிக்கு விஜயம்-

imagesCAOD1KU1காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடாத்தும் ஆணைக்குழு கிளிநொச்சிக்கு விஜயம் செய்ய உள்ளது. நான்கு நாட்கள் தங்கியிருந்து கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆணைக்குழு ஒன்றை அமைத்திருந்தார். இந்த ஆணைக்குழுவிற்கு கிடைக்கபெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் தற்போது விசாரணை நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் 18ம் திகதிமுதல் 21ம் திகதி வரையில் விசாரணை நடத்தப்பட உள்ளது. ஸ்கந்தபுரம் வித்தியாலயம், இயனர்புரம் வித்தியாலயம், மாவட்டச் செயலகம் ஆகியவற்றில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. 1982ம் ஆண்டு முதல் இதுவரையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் இதுவரை கிடைக்கபெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணை நடத்தப்பட உள்ளது.

தேரர்களால் இன ஒன்றுமையை கட்டியெழுப்ப முடியும்-பொன்சேகா-

sarathதேசிய ஒன்றுமையை கட்டியெழுப்ப தேரர்களுக்கும் பங்களிப்புச் செய்ய முடியும் என்று ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கட்சியினால் ஸ்தாபிக்கப்பட்ட ஜனநாயக பிக்கு அமைப்பு என்ற பெயரில் புதிய அமைப்பின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான் எண்ணும் வகையில் நிரந்தர சமாதான நாடாக திகழ, கடந்த கால நிகழ்வுகளை மனதில் கொண்டு, எதிர்காலத்தில் பிரச்சினை தோன்றாமல் இருப்பதற்கு தேரர்கள் தலைமைத்துவம் ஏற்க முடியும் என்று கருதுகின்றோன். தேரர்களின் முன்மாதிரியான செயற்பாடுகள் நாட்டின் இன ஒற்றுமை, சமய ஒன்றுமை என்பவற்றை பேணி, நாட்டை முன்நோக்கி கொண்டுச் செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

திருமலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் மீட்பு-

thirumalai neeril adiththuதிருகோணமலை, உப்புவெளி பகுதியில் கடலில் நீராடிக்கொண்டிருந்த நால்வர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் காப்பற்றப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருணாகல் பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர். இதேவேளை, குறித்த கடற்பகுதியில் நேற்று மேலும் 2 சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காப்பற்றப்பட்டுள்ளனர். ஏறாவூர் பகுதியிலிருந்து கல்விச் சுற்றுலா சென்றிருந்த சிறுவர்களே காப்பாற்றப்பட்டுள்ளனர்.

வெளிநாடு சென்ற 3000 இலங்கையர்கள் முறைப்பாடு-

imagesCAAFRW6Nமத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்று மீண்டும் நாடு திரும்பும் நோக்கில் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களிடமிருந்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது. ஒப்பந்த காலப்பகுதிக்குள் எவருக்கும் நாடு திரும்ப முடியாது என பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான மங்கல ரன்தெணிய கூறியுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வபர்களுக்கான ஒப்பந்த காலம் 2 வருடங்களாக இருப்பதுடன் இந்த காலப்பகுதியில் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் நாடுதிரும்ப முடியாது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் மக்கள் தெளிவடைய வேண்டும் எனவும், கடந்த வருடம் சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பெண்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதுடன் இவர்களுள் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் மீண்டும் நாடு திரும்பும் நோக்கில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் கூறியுள்ளார்.

வெலிக்கடை கைதிகள் கொலை தொடர்பான அறிக்கை-

welikada jail killings2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் 27 பேர் கொல்லப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கு நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவின் அறிக்கை தனது கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை ஜனாதிபதிக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் கையளிக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி பந்துல அத்தப்பத்து, ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் குணசேன தேனபது மற்றும் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் சட்ட ஆலோசகர் லலித் அந்தாஹெந்ததி அடங்கிய மூவர் கொண்ட குழுவே நியமிக்கப்பட்டிருந்தனர்.

மீனவர்கள் ஒப்படைப்பு தற்காலிக இடைநிறுத்தம்-

sri lankan fishermenகடல் சீற்றம் காரணமாக இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களை, இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், தமிழகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 52 இலங்கை மீனவர்களையும், சர்வதேச கடல் எல்லையில் இரு நாட்டு கடற்படையிடமும் பரஸ்பரம் இன்றையதினம் ஒப்படைப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இலங்கையில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மறு அறிவிப்பு வரும்வரையில் மீனவர்களை ஒப்படைப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை கடற்படை அதிகாரிகள், இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இந்திய சிறையிலுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதைப் பொறுத்து, மீதமுள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

விரைவுத் தபால் சேவையை முன்னெடுக்க விசேட செயற்திட்டம்-

imagesவிரைவுத் தபால் சேவையை உரியமுறையில் முன்னெடுப்பதற்கு விசேட செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்தள்ளது. நாட்டில் உள்ள எந்தவொரு பகுதிக்கும் 24 மணித்தியாலங்களுக்குள் கடிதங்களை விநியோகிக்கும் வகையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். மேலும் இச்சேவையின் நாட்டின் பிரதான நகரங்களில் அனுப்பப்படும் பொதிகள் மறுநாள் மதியத்திற்கு முன்னதாக பெறக்கூடியதாகவும் ஏனைய பிரதேசங்களில் இரண்டு நாட்களிலும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அத்துடன் நடைமுறையிலுள்ள விரைவுத் தபால் சேவையின் ஊடாக முன்னரை விடவும் அதிகளவிலானவர்கள் பயனைப் பெறுவதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

போர் குற்றங்களை முஸ்லிம்கள் நடுநிலையாக பார்க்க வேண்டும்-ஹக்கீம்-

Hekeemயுத்த காலத்தில் இலங்கை இடம்பெற்ற போர்க் குற்றங்களை முஸ்லிம்கள் நடு நிலையாக இருந்து பார்க்க வேண்டும் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேசம் இலங்கைக்கு கொடுக்கும் அழுத்தத்தினால் நாட்டில் இனங்களுக்கு இடையில் சகிப்புத் தன்மை ஏற்படுவதுக்கு பாரிய தடங்கலாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற மீலாதுன் நபி விழாவில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், போர் குற்றங்களுக்கான அமெரிக்காவின் தூதுவர் ரெப் அன்மையில் இலங்கைக்கு வந்தபோது, நீதி அமைச்சர் என்ற வகையில் என்னையும் சந்தித்தார். Read more

அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!

imagesCA9O8Z5G

தை பிறந்தால் வழி பிறக்கும்  என்பது பழமொழி!

அரசாள்பவர் மனம் திறந்தால் எம் நிலைமாறும் என்பது புதுமொழி!

imagesCA19AWQQ