பொது வேட்பாளராக நியமித்தமைக்கு நன்றி-அமைச்சர் மைத்திரிபால சிறிசேன-
எதிரணியின் பொது வேட்பாளராக தம்மை நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குறிப்பாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சியின் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று பிற்பகல் கொழும்பு நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டபோதே இவ்வாறு கூறியள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பிலமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனநாயக மக்கள் கட்சியின் அர்ஜூன ரணதுங்க மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, துமிந்த திஸாநாக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் பங்கேற்றிருந்ததாக கூறப்படுகிறது. நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை 100 நாட்களுக்குள் இல்லாது செய்வதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டுள்ளார். தேர்தல் வெற்றியின் பின்னர் அனைத்து ஊடகவியலாலர்களும், ஊடக நிறுவனங்களும் சுதந்திரமாக செயற்பட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளபப்போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். மேலும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதாகவும் 17வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, 18வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை இரத்து செய்யப்போவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை-சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க-
மீண்டும் அரசியல் எனும் தனது தாய் வீட்டுக்குள் நுழைய சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு தான் மகிழ்வதாக கண்ணீர் மல்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். இன்று நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 9 வருட மௌத்தின் பின் மீண்டும் அரசியலில் பிரவேசிக்க தினம் தினம் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மட்டுமல்ல பல காரணங்கள் உண்டு அவை ஒவ்வொன்றையும் கூற வெட்கமாக உள்ளது, அது இங்கு முக்கியமில்லை. கொலை, துஷ்பிரயோகங்களே நாட்டில் இடம்பெறுகின்றன. அதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதோடு, எதிர்ப்பவர்களுக்கு இடமாற்றங்கள் உள்ளிட்ட சிக்கல் ஏற்படுகின்றன. பலர் என்னை பொது வேட்பாளராக களமிறங்க கூறினர். 18வது அரசியல் அமைப்பு சட்டத்தின் படி முடியும் என்றனர். ஆனால் மீண்டும் அவ்வாறு போட்டியிட எந்தவொரு அவசியமும் எனக்கு இல்லை, அரசியல் ரீதியாக தேவையான உதவிகளை வழங்கி நாட்டை கட்டியெழுப்ப உதவுவேன். எந்த பதவியும் தேலையில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.
பதவிகளை துறந்து மஹிந்தவின் இராஜாங்கத்தை ஒழிக்க முன்வந்துள்ளோம்-ராஜித்த-
நான் நாட்டிற்காக செயலாற்றவே அரசியலுக்கு வந்தேன். அதனைக் கருத்தில் கொண்டு நான் எனது பதவிகளை துறந்து, மஹிந்தவின் இராஜாங்கத்தை ஒழிக்க நாம் தற்போது முன்வந்துள்ளோம் என ராஜித்த சேனரத்ன தெரிவித்துள்ளார். புதிய நகரமண்டபத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எனது எதிரிகளுக்கு நான் ஒருபோதும் துரோகம் நினைக்கமாட்டேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்கும் எனது குடும்பத்திற்கும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. நான் நாட்டிற்காக செயலாற்றவே அரசியலுக்கு வந்தேன். அதனைக் கருத்தில்கொண்டு நான் எனது பதவிகளை துறந்துள்ளளேன். இந்த தீர்மானத்திற்காக சிலர் எங்கள்மீது சேறுபூச நினைப்பார்கள். நான் அதனையெல்லாம் பொருட்படுத்த மாட்டேன். நான் எனது நாட்டு மக்களுக்காக வாழத் தயாராகவுள்ளளேன். நான் இதன்போது ஊடகவியலாளர்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகின்றேன். நீங்கள் பக்கச்சார்பற்ற நிலையில் நேர்மையாக உங்களுடைய சேவையை செய்ய வேண்டும். அப்போது தான் நீங்களும் வரலாற்றி;ல் இடம்பிடிப்பீர்கள். மக்களுக்கு உண்மையான செய்திகளை நீங்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதிகாரங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்தின் கையில் அடக்கம்;-மைத்திரிபால சிறிசேன-
நாட்டின் அதிகாரங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்தின் கையில் குவிந்திருப்பதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் சட்டம் சீர்குழைந்துள்ளது. யுத்த வெற்றியின் பின்னர் இந்த அரசு பிழையான வழியில் செல்கின்றது. குறிப்பாக அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் பாரியதொரு தவறாகும் 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சந்திரிகா அம்மையார் பாரிய முயற்சிகளை முன்னெடுத்தார். சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கொள்கை மற்றும் தூரநோக்கு இருக்கிறது. 1974 – 1994 வரை சிறீமாவோ பண்டாரநாயக்க, கண்ணீர் சிந்தி கட்சியைப் பாதுகாத்தார் போதைப்பொருள் மற்றும் புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இடையுறுகளைச் தாம் சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாட்டுக்குள் சகலதும் மறைக்கப்பட்டு சுதந்திர ஊடகம் அடிபணியச் செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்டில் சுதந்திர ஊடகத்துக்கு இடமில்லை தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் பொலிஸ், நீதிமன்றம் ஆகியன பக்கச்சார்பின்றி செயற்படும் என்பதை உறுதிப்படுத்துவேன். சகல துறைகளையும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவேன். நாட்டில் தற்போது நிர்வாகம் ஒரு குடும்பத்தின் கையில் உள்ளது. அரசியலமைப்பின் 17ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்.அத்துடன் அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் ஒழிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.